Link whatsapp to another mobile | மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது, ஒரு வாட்ஸ்அப் எண்ணை இரண்டு மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு வாட்ஸ்அப் நம்பர் கொண்டு 2 மொபைல் போன்களில் signup செய்து கொள்ளலாம்.
இந்த அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. குறைந்த பயனர்களுக்கு
பீட்டா சேவை வழங்கப்படுகிறது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என
வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வாட்ஸ்அப்பை பயனர்கள் போன் தவிர லேப்டாப், கம்யூட்டர் போன்ற சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் புது அம்சம் மூலம் 1 நம்பர் வைத்து 2 மொபைல் போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் படி கொண்டு வரப்பட உள்ளது.
வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் பயனர்கள் இப்போதே இந்த வசதியை பயன்படுத்த முடியும்.
போன் இணைப்பு - Steps for Primary phone
Step 1: உங்கள் primary மொபைல் போனில் வாட்ஸ்அப் ஓபன் செய்ய வேண்டும்.
Step 2: வலப்புறத்தில் உள்ள three-dotted ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: அதன் உள்சென்று “Linked devices” ஆப்ஷன் செலக்ட் செய்யவும்.
Step 4: “link a device” ஆப்ஷன் கொடுத்தால் ஸ்கிரீனில் க்யு ஆர் கோட் வரும்.
Steps for secondary phone
இது மிகவும் சுலபம். எந்த மொபைலில் இதே வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ அந்த மொபைல் போனை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதே பிராஸஸ் தான். இந்த மொபைலிலும் வாட்ஸ்அப் ஓபன் செய்து, Link a device ஆப்ஷன் உள் சென்று, primary phone-யில் வந்த க்யு ஆர் கோட் ஸ்கேன் செய்யவும். அவ்வளவு தான் வாட்ஸ்அப் இணைக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil