/indian-express-tamil/media/media_files/KYGP1l0t7ZSWwxpwlzlA.jpg)
யு.பி.ஐ, ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பிரதானமாக உள்ளது. இதன் உடன் வரும் யு.பி.ஐ லைட் வசதி பின் நம்பர் இல்லாமல் நேரடியாக மற்றவர்களுக்கு பணம் செலுத்த உதவுகிறது. குறிப்பாக சிறிய டிஜிட்டல் பேமெண்ட்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
யு.பி.ஐ லைட் என்பது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) வழங்கும் சாதனத்தில் உள்ள பணப்பையாகும் (wallet). மேலும் இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. அதிகபட்சமாக ரூ.2,000 பேலன்ஸ் வைத்திருக்கும் திறன் கொண்ட வாலட் மூலம் ஒரே நேரத்தில் ரூ.500 வரை விரைவாகப் பணம் செலுத்த பயனர்களை இது அனுமதிக்கிறது.
வழக்கமான UPI பரிவர்த்தனைகளைப் போலல்லாமல், UPI லைட் பரிவர்த்தனைகளுக்குபின் நம்பர் தேவையில்லை, இதனால் பணம் செலுத்துவதில் தோல்வி விகிதம் ( payment failure) பிரச்சனையை குறைகிறது.
யுபிஐ லைட் சாதனத்தில் வாலட் அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது (on-device wallet), அதாவது பேலன்ஸ் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் வேறு சாதனத்திற்கு மாற்ற முடியாது. புதிய மொபைலுக்கு நீங்கள் மாறும் போது , பயனர்கள் தங்கள் பணத்தை இழப்பதைத் தவிர்க்க UPI லைட் வாலட்டை காலி செய்ய வேண்டும். கூகுள் பே, போன் பே, பேடிஎம், BHIM போன்றவற்றில் UPI லைட் பயன்படுத்தப்படுகிறது.
யு.பி.ஐ லைட் பயன்படுத்துவது எப்படி?
1. BHIM, Google Pay அல்லது PhonePe போன்ற UPI ஆப்ஸைத் திறக்கவும்.
2. எனெபிள் UPI லைட் ஆப்ஷனை கிளிக் செய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.
3. UPI லைட் வாலட்டில் செலுத்த விரும்பும் தொகையை உள்ளிடவும் (அதிகபட்சமா ரூ. 2,000 வரை மட்டுமே Add செய்ய முடியும்).
4. UPI பாஸ்வேர்ட் மூலம் பரிவர்த்தனையை அங்கீகரிக்கவும்.
UPI லைட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்த, UPI-ஆல் இயங்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது பெறுநரின் ஃபோன் எண்ணை உள்ளிடவும். அடுத்து கட்டண விருப்பமாக UPI-Lite ஐத் தேர்ந்தெடுக்கவும். தற்போது, பயனர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.500 வரை மட்டுமே அனுப்ப முடியும்.
UPI-Lite கணக்கு தேவையில்லை என்றால் அதையும் எளிதாக நீக்கலாம், wallet-ல் உள்ள பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு திரும்பி அனுப்பபடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.