Advertisment

ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் வெப்பை எப்படி பயன்படுத்துவது?

How to use Whatsapp Web without your Smartphone Tamil News இந்த மல்டி மீடியா அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், தற்போது ஆதரிக்கப்படாத சில அம்சங்கள் உள்ளன.

author-image
WebDesk
New Update
How to use Whatsapp Web without your Smartphone Tamil News

How to use Whatsapp Web without your Smartphone Tamil News

How to use Whatsapp Web without your Smartphone Tamil News : வாட்ஸ்அப் தற்போது பல சாதன பீட்டா புரோகிராமை வழங்குகிறது. இது பயனர்களுக்கு வெப், டெஸ்க்டாப் மற்றும் போர்ட்டலுக்கான வாட்ஸ்அப்பின் புதிய பதிப்பை முயற்சி செய்ய ஆரம்ப அணுகலை வழங்குகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் தொலைப்பேசிகளை இணைக்காமல் இணைக்கப்பட்ட துணை சாதனங்களைப் பயன்படுத்த இது அனுமதிக்கிறது.

Advertisment

பிரவுசர் மற்றும் பிற சாதனங்களை உள்ளடக்கிய நான்கு சாதனங்களை ஒருவர் தனது கணக்கில் இணைக்க முடியும். இந்த அம்சம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை ஆதரிக்கிறது என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது உங்கள் தனிப்பட்ட செய்திகள், மீடியா மற்றும் அழைப்புகள் அனைத்தும் தனிப்பட்டதாகவே இருக்கும்.

முக்கிய ஃபோனில் செயலில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், நீங்கள் வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் மற்றும் போர்ட்டலைப் பயன்படுத்த முடியும் என்பது நல்ல விஷயம். இருப்பினும், பிரதான சாதனம் 14 நாட்களுக்கு மேல் துண்டிக்கப்பட்டிருந்தால், இணைக்கப்பட்ட சாதனங்கள் தானாகவே வெளியேற்றப்படும்.

உங்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் வெப்பை எவ்வாறு பயன்படுத்துவது?

ஆரம்பக் கட்டத்தில் உங்கள் சாதனத்தை வெப், டெஸ்க்டாப் அல்லது போர்ட்டலுடன் இணைக்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் ஸ்மார்ட்போனை இணைக்காமல் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும். நீங்கள் அதை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஸ்டெப் 1: உங்கள் மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறந்து, திரையின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: "இணைக்கப்பட்ட சாதனங்கள்" என்பதை க்ளிக் செய்யவும். பின்னர் "பல சாதன பீட்டா" என்பதை க்ளிக் செய்யவும். வாட்ஸ்அப் பின்னர் ஒரு பக்கத்தைக் காண்பிக்கும். இது அம்சத்தின் வரம்புகள் மற்றும் பிற விஷயங்களை விளக்குகிறது.

ஸ்டெப்  3: இப்போது, ​​"பீட்டாவில் சேரவும்" பட்டனைத் தட்டி, "தொடரவும்" பட்டனை அழுத்தவும். இது முடிந்ததும், QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை வாட்ஸ்அப் இணையத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு முன் என்னென்ன நினைவில் கொள்ள வேண்டும்?

இந்த மல்டி மீடியா அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், தற்போது ஆதரிக்கப்படாத சில அம்சங்கள் உள்ளன. முதன்மை சாதனம் ஐபோனாக இருந்தால் துணை சாதனங்களில் உள்ள சாட்களை அழித்துவிட்டால் அல்லது நீக்கினால் இந்த அம்சம் இயங்காது என்று நிறுவனம் தனது வலைப்பதிவு போஸ்ட்டில் கூறுகிறது.

வாட்ஸ்அப்பின் பழைய பதிப்பைப் பயன்படுத்தும் சாதனங்களை இந்த அம்சம் ஆதரிக்காது. அதில் டேப்லெட்டுகளும் அடங்கும்.

துணை சாதனங்களில் நேரடி இருப்பிடத்தைப் பார்க்க முடியாது என்று வாட்ஸ்அப் குறிப்பிடுகிறது. பல சாதன பீட்டா அம்சமானது வாட்ஸ்அப் இணையத்திலிருந்து இணைப்பு மாதிரிக்காட்சிகள் மற்றும் துணை சாதனங்களில் ஒளிபரப்பு பட்டியலை உருவாக்குதல்/பார்த்தல் போன்ற செய்திகளை ஆதரிக்காது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment