வாட்ஸ்அப் பிரபலமான மெசேஜிங் செயலியாகும். மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. நிறுவனம் பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது 'Message yourself', உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பி கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது வாட்ஸ்அப்பில் பலரும் எதிர்பார்த்த ஒரு வசதி ஆகும். நம்மில் பலர் நாம் செய்யவேண்டியதை நோட்ஸ் (Notes) எடுத்து வைப்போம். அந்த செயலை மறக்காமல் செய்ய வேண்டும் என குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வோம். Reminder-ஆக வைத்துக் கொள்வோம். இதை முன்பு மற்றொருவருக்கு நண்பர்கள், உறவினர்களுக்கு வாட்ஸ்அப் அனுப்பி வைத்து பயன்படுத்துவோம். ஆனால் இப்போது, Message yourself வசதி மூலம் இந்த நோட்ஸ், ரிமைன்டர்களை உங்களுக்கு நீங்களே அனுப்பி பயன் பெறலாம். இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். இந்த வசதி ஐபோன், ஆண்ட்ராய்டு இரண்டு போன்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மெசேஜ் யுவர்செல்ஃப் வசதி
Step 1: முதலில் உங்கள் போன் வாட்ஸ்அப்-பை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும்.
Step 2: அடுத்து எப்போதும் போல் உங்கள் Contact-இல் உங்கள் வாட்ஸ்அப் நம்பரை பதிவிட்டு Save செய்ய வேண்டும்.
Step 3: இப்போது, வாட்ஸ்அப் பக்கம் வந்தால் அதில் Contact-லிஸ்டில் உங்கள் பெயர் முதலில் இருக்கும். அதில் சென்று உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்து கொள்ளலாம்.
அப்டேட் செய்தும் உங்களுக்கு இந்த வசதி வரவில்லை என்றால், நேரடியாக Contact சென்று அங்கு உங்கள் வாட்ஸ்அப் நம்பர் Save செய்ததை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நம்பர் பக்கத்தில் இருக்கும் வாட்ஸ்அப் ஐகானை கிளிக் செய்து உங்களுக்கு நீங்கள் மெசேஜ் செய்து கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil