எல்.ஜி நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான எல்.ஜி வி30 (LG V30) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினில் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ(IFA 2017) டெக்னாலஜி ஷோ-வில், எல்.ஜி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எல்.ஜி வி30 (LG V30) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. தென் கொரிய நிறுவனமான எல்.ஜி., மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களகாக திகழும் ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் போட்டியிடும் விதமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.
மல்டிமீடியா மூலமாக அதிக சிறப்பம்சங்களை பெற விரும்பும் வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு இந்த எல்.ஜி வி30 (LG V30) ஸ்மார்ட்போனை எல்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதேபோன்று கடந்த வாரம் நியூயார்க்கில் சாம்சங் நிறுவனமானது சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது.
இந்த நிலையில், எல்.ஜி வி30 (LG V30) ஸ்டார்ட்போனது ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வகையில் புதிய பரிணாமத்தை வளர்க்கும் வகையில் அமையும் என்று எல்.ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- எல்.ஜி வி30 (LG V30) ஸ்மார்ட்போனானது முதல்முறையாக 6 இன்ச் டிஸ்ப்ளேயுடன்(2,880 x 1,440, ரிசொலூசன், P-OLED)வெளிவருகிறது. எனினும், ஸ்னாப்டிராகம் 825 ப்ராசஸரையே கொண்டிருக்கிறது.
- 4 ஜி.பி ரேம் மற்றும் 64 அல்லது 128 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக அதிகப்படுத்திக் கொள்ள முடியும்)
- 3300 mAh பேட்டரி திறனை கொண்டிருக்கிறது. யு.எஸ்.பி சார்சிங் மற்றும் வயர்லஸ் சார்சிங் (ஃபாஸ்ட் சார்ச்சிங் சப்போர்ட்) என்பது கவனிக்கத்தக்கது.
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகட் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.
- கேமராவைப் பொறுத்தவரையில் முன்னதாக வெளியாக வி20 ஸ்மார்ட்போனை காட்டிலும், இந்த எல்.ஜி வி30 (LG V30) ஸ்மார்ட்போனில் அதிக மாற்றம் உள்ளது. அப்கிரேடு செய்யப்பட்ட 13 எம்.பி வைடு ஆங்கிள் லென்ஸ்(ரியர் கேமரா), மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா.
- டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் என்பது வி- சீரியஸின் சிறப்பம்சமாகும். அந்தவகையில் இந்த
எல்.ஜி வி30 (LG V30) ஸ்மார்ட்போனும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டதுதான். 1.5 மீட்டர் ஆழம் வரை, சுமார் 30 நிமிடங்கள் வரை தாக்குப் பிடிக்குமாம். ஆடியோவும் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் செப்டெம்பர் 21-ம் தேதி முதல் எல்.ஜி வி30 (LG V30) விற்பனைக்கு வரவுள்ளது என எல்.ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து வட அமெரிக்கா, ஆசியா, ஜரோப்பா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
64 ஜி.பி-யில் வெளிவரும் மாடலானது, (Aurora Black, Cloud Silver, Moroccan Blue and Lavender Violet.) நான்கு கலர்களில் வெளிவருகிறது.