IIT Madras students: சென்னை ஐஐடி இன்குபேட்டட் நிறுவனம் ஜான்ட்கே ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உதவியுடன் உள்நாட்டு தயாரிப்பில் மொபைல் ஓ.எஸை உருவாக்கியுள்ளனர். இந்த உள்நாட்டு தயாரிப்பு ஓ.எஸ்ஸிற்கு பார்ஓ.எஸ் (BharOS) எனப் பெயரிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் "ஆத்மநிர்பர்" திட்டத்தின் கீழ் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த OS நாட்டின் 100 கோடி மொபைல் போன் பயனர்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாப்ட்வேர் மிகவும் பாதுகாப்பானது என ஐஐடி குழுவினர் கூறியுள்ளனர். இந்த ஓ.எஸ்ஸின் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
BharOS என்பது ஒரு மொபைல் இயங்குதளமாகும், இது பயனர்களுக்கு அதிக சுதந்திரம், கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதன் மூலம் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற பயன்பாடுகளைத் தேர்வுசெய்து பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த ஓ.எஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான ஓ.எஸ் செயல்பாடாகும்.
இந்த ஓ.எஸ்ஸின் மிகச்சிறந்த அம்சம் என்னவென்றால் இதில், டிஃபால்ட் ஆப்ஸ் (NDA) கிடையாது. மற்ற ஆண்ட்ராய்டு போலல்லாமல், இதில் டிஃபால்ட் ஆப்ஸ் இல்லை என்பதால் பயனர்களுக்கு அதிக ஸ்டோரேஜ் வசதி கிடைக்கிறது. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான செயலியை மட்டும் தேர்ந்தெடுத்த பயன்படுத்தலாம். தெரியாத ஆப்களை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இதில் இல்லை.
ஆண்ட்ராய்டு போன்களைப் போலவே 'நேட்டிவ் ஓவர் தி ஏர்' (NOTA) அப்டேட்களும் இதற்கு வழங்கப்படும். பயனர்கள் தனியாக அப்டேட் செய்யத் தேவையில்லை, ஆடேமேடிக்காக ஓ.எஸ்யே அதை அப்பேட் செய்து கொள்ளும்.
மேலும், பயனர்கள் தங்களுக்கு வேண்டிய செயலிகளை பிரைவேட் ஆப் ஸ்டோர் சர்வீசஸ் (PASS) மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதில் மிகவும் பாதுகாப்பானது என நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஓ.எஸ் தற்போது குறிப்பிட்ட நிறுவனங்களிடையே மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை சென்னை ஐஐடி வருங்காலங்களில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/