கடந்த ஓராண்டில் உலகில் அதிகம் டேட்டா பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். புது டெல்லியில் இந்திய மொபைல் வேல்டு காங்கிஸ் தொடக்க விழாவில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது: இந்திய மொபைல் தொழில்துறையானது உலகளவில் ஒப்பற்ற வளர்ச்சியை பெற்று வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த பொருளாதாரமானது $2.5 ட்ரில்லியனில் இருந்து $7 ட்ரில்லியனாக அதிகரிப்பதோடு, உலக அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்ட முதல் மூன்று நாடுகளில் பட்டியல் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவானது, மெக்கானிசம், மாஸ் ப்ரொடக்சன், ஆட்டோமேஷன் போன்ற முதல் மூன்று தொழில் புரட்சிகளை கையாள தவறிவிட்டது. ஆனாலும், தொடர்பு, டேட்டா, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் மூலம் நான்காவது தொழில்துறை புரட்சியை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மொபைல் இன்டெர்நெட் மற்றும் க்ளவ்டு கம்யூட்டிங் தான் நான்காவது தொழில்துறை புரட்சியின் அடிப்படை தொழில்நுட்பமாகும் என்றார்.
டேட்டா என்பது எண்ணெய் வளத்தை போன்றது. இவற்றில் நாம் ஏற்கெனவே நல்ல நிலையில் இருப்பதனால், இந்தியா அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று மீடியா மற்றும் ஆம்புலன்ஸ் உரையில் குறிபிட்டார். முகேஷ் அம்பானியின் கருத்தின்படி, டேட்டா என்பது டிஜிடல் பொருளாதாரத்திற்கு ஆக்ஸிஜன் போன்றது. எனவே, இந்த தொழில்துறையில் வேகமான டேட்டா சேவையானது, குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும்.
கடந்த 12 மாதத்தித்திற்குள்ளாக, இந்தியாவில் 4ஜி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2ஜி வாடிக்கையாளர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் டிஜிடல் டெக்னாலஜியை மேம்படுத்துவதற்கு, அதற்கான தேவைகள் மற்றும் சவால்களை இந்தியா பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
ரிலையன்ஸ் ஜியோவானது சமீபத்தில் இந்திய தொலைதொடர்பு இடைவெளியை நிறப்பும் வகையில், நகரங்களுக்கு பதிலாக முதலில் கிராமப்புரங்களில் தொடங்கி, ஜியோ போன்களை டெலிவரி செய்து வருகிறது. 4ஜி வோல்ட்இ வசதிகளுடன் கூடிய இந்த ஜியோபோன் இலவசம் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது. முதலில் ரூ.1500 பாதுகாப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த தொகை திரும்ப அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.