இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு ட்விட்டரில் வெற்றி

மகளிர் உலகக்கோப்பைக்கு முன்னதாக மே மாதம் 21-ஆம் தேதி மிதாலி ராஜை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 81,000-லிருந்து 1.2 லட்சமாக உயர்ந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் உலக கோப்பைப் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பெண்கள் நம் அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிட்டனர். ஆண்களுக்கானதாக மட்டுமே பார்க்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டை தங்கள் வசப்படுத்திய பெண்கள் எப்போதுமே பாராட்டுக்குரியவர்கள்.

இவர்கள் தங்களது ரசிகர், ரசிகைகளுடன் தொடர்புகொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். முகநூலை பயன்படுத்த முடியாவிட்டாலும், ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளனர். மே மாதத்திலிருந்து இன்று வரை ட்விட்டரில் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. உலகளவில் அதிகளவில் பின் தொடரப்படும் 5 மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் 3 பேர் இந்திய வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர்களை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கிலேயே உள்ளது. ஆனால், தோனி, விராத் கோஹ்லி ஆகியோரை மில்லியன் கணக்கிலானோர் ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கிரிக்கெட் வீராங்கனைகளை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் சீராக உயர்ந்துகொண்டே வருகிறது. அவற்றின் விவரங்களைக் காண்போம்.

மிதாலி ராஜ், பின் தொடர்பவர்கள்: 1,30,000 (மே மாதம் 81,000)

இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ட்விட்டரில் அதிக செயல்பாட்டுடன் உள்ளார். கடந்த சில வருடங்களாக ட்விட்டரில் இருந்து வருகிறார் மிதாலி ராஜ். மகளிர் உலகக்கோப்பைக்கு முன்னதாக மே மாதம் 21-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது மிதாலி ராஜை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 81,000-லிருந்து 1.2 லட்சமாக உயர்ந்தது.

 

ஹர்மன்ப்ரீத் கவுர்,  பின் தொடர்பவர்கள்: 80,600 (மே மாதம் 48,400)

ஹர்மன்ப்ரீத் கவுரை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மே மாதம் 48,000-லிருந்து 70,000-ஆக உயர்ந்தது. இதில், 10,000 பேர் அரையிறுதிப்போட்டியில் அவர் சதம் அடித்த பின்னர் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் கபில் சர்மாவின் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்த ஹர்மன்பிரீத் கவுரின் பதிவு 69 ரீட்வீட்டுகளை அள்ளியது. அதன்பிறகு, அரையிறுக்குப் பின் அவர் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறிய பதிவு 1,400 பேர் ரீட்வீட் செய்தனர்.

ஸ்மிருதி மந்தனா, பின் தொடர்பவர்கள்: 1,02,000 (மே மாதம் 74,500)

ஸ்மிருதி மந்தனா மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் ட்விட்டரில் ஆயிரக்கணக்கிலான புதிய ரசிகர்களை பெற்றுள்ளனர்.

வேதா கிருஷ்ணமூர்த்தி, பின் தொடர்பவர்கள்: 38,500 (மே மாதம் 27,000)

 

சுஷ்மா வர்மா, பின் தொடர்பவர்கள்: 29,500 (மே மாதம் 21,300)

உலகளவில் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லேனிங்-க்கு கூட ட்விட்டரில் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரம் பேர்தான் பின் தொடர்கின்றனர். இங்கிலாந்து அணியின் சாரா டெய்லரை ட்விட்டரில் கடந்த 2 மாதங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 6,000 என்ற அளவில் தான் உயர்ந்துள்ளது.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளனர் என்பது தெளிவாகிறது. கீப் ராக்கிங் கேர்ள்ஸ்

×Close
×Close