New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/insta360-go-3.jpg)
Insta360 Go 3 is a compact action camera
Insta360 Go 3: இன்ஸ்டா360 நிறுவனம் Go 3 என்ற உலகின் மிகச்சிறிய ஆக்ஷன் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.
Insta360 Go 3 is a compact action camera
இன்ஸ்டா360 நிறுவனம் Go 3 என்ற உலகின் மிகச்சிறிய ஆக்ஷன் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்டர் ஃப்ரூவ் வசதி உள்பட சிறந்த தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும் எனவும் கூறியுள்ளது.
காம்பாக்ட் ஆக்ஷன் கேமராவான Go 3 வெறும் 35 கிராம் எடை கொண்டது. சிறந்த ரெசல்யூஷனில் வீடியோக்களை படம்பிடிக்கும் திறன் கொண்டது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஆக்ஷன் பாட் உடன் இணைக்கப்படும் போது, ஒரு முறை சார்ஜ் செய்தால் 170 நிமிட பதிவு நேரத்தை பெற முடியும்.
இன்ஸ்டா360 புதிய ஆக்ஷன் கேமரா, கிம்பல் போன்ற நிலைப்படுத்தல் மற்றும் 360-டிகிரி ஹரைசன் லெவலிங் போன்ற கிளாசிக் அம்சங்களைக் கொண்டுள்ளது. இதேபோல், ரிமோட் கண்ட்ரோல் வசதி, லைவ் ப்ரிவியூ மல்டி-ஃபங்க்ஷன் ஆக்ஷன் பாட் ஆகியவை உள்ளன. இந்த ஆக்ஷன் கேமரா வாட்டர் ஃப்ரூவ் வசதி கொண்டது. இதற்கு IPX8 வாட்டர் ஃப்ரூவ் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.
Unleash your creativity with Insta360 GO 3, the tiny mighty action cam. Use the all new Action Pod for Live Previews, up to 170 minutes of battery life, and so much more! Order today for free shipping 👉 https://t.co/UD1UnDVdZp#Insta360 #Insta360GO3 #TinyMightyActionCam pic.twitter.com/yWaCaBaSoy
— Insta360 (@insta360) June 27, 2023
ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் இன்ஸ்டா360 ஆப் டவுன்லோடு செய்து இந்த கேமராவில் உள்ள போட்டோகளை ஏ,ஐ வசதி மூலம் எடிட் செய்து கொள்ளலாம்.
கேமரா விலை
32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய Insta360 Go 3 ஸ்டான்டலோன் பேஸ் மாடலில் விலை 449.99 அமெரிக்க டாலராகும். இதேபோல், இது ஆக்ஷன் கிட், டிராவல் கிட், வாட்டர் ஸ்போர்ட்ஸ் கிட் மற்றும் பைக் கிட் வடிவங்களிலும் கேமரா கிடைக்கிறது. 32, 64 அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளிலும் கேமரா விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.