ஆப்பிள் நிறுவனம் மொபைல் போன்கள், லேப்டாப் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், மேக் லேப்டாப், கணினி பிரத்யேக சாஃப்ட்வேர் அம்சங்களுடன் வருவதால் எப்போதும் இதற்கு தனிச்சிறப்பு. இந்நிறுவனம் அண்மையில் iPhone 14 அறிமுகப்படுத்தியது. பல புதிய அம்சங்களுடன் போன் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆன்லைன், கடைகளில் போன் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஐபோன் 14 ரூ.79,900 தொடங்கி விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் போன் தள்ளுபடி விலையில் போன் வாங்கலாம். ஜியோவின் சொந்த ஷாப்பிங் தளமான ஜியோமார்ட்டிலும் ரூ.79,900 விற்பனை செய்யப்படுகிறது. எவ்வாறாயினும், HDFC வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ. 5000 , 5% கேஷ்பேக் பெறலாம். இது இ.எம்.ஐ (EMI) மற்றும் இ.எம்.ஐ அல்லாத பரிவர்த்தனைகளும் இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது. தள்ளுபடி விலையில் ஐபோன் 14 ரூ.74,900-க்கு பெறலாம்.
கூடுதல் தள்ளுபடி
பயனர்கள் ரூ.5000 தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ.2000 தள்ளுபடி பெறலாம். ஆனால் இது ஆன்லைன் பர்சேசுக்கு பொருந்தாது. ஆஃப்லைனில், அதாவது கடைகளில் நேரடியாக வாங்கும் போது இதைப் பயன்படுத்தலாம்.
ஆன்லைனில் ஐபோன் 14 வாங்க விரும்புபவர்கள், HDFC கேஷ்பேக் சலுகை பயன்படுத்தலாம். அதற்கு
முதலில் ஜியோமார்ட் ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும். பின் லாக்கின் செய்து iPhone 14 போனை தேடி, உங்களுக்கு விருப்பமான கலரைத் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.
iPhone 14 சிறப்பம்சங்கள்
ஐபோன் 14 6.1 இன்ச் XDR OLED டிஸ்பிளேவுடன் வருகிறது. midnight, starlight, blue, purple and Product (Red) நிறங்களில் போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆப்பிளின் A15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் iOS 16 உடன் வருகிறது.
போனின் பின்புறத்தில் 12MP டூயல் கேமரா வசதி உள்ளது. முன்பக்கத்தில் 12MP TrueDepth கேமரா கொண்டுள்ளது. 5G, WiFi 6 மற்றும் புளூடூத் 5.3 ஆகியவற்றை ஆதரிக்கிறது. eSIM வசதியும் உள்ளது. இந்திய தயாரிப்பு போன்களில் physical SIM வசதி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil