பாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா?

Iphone Tamil News: நீங்கள் ஏற்கெனவே இருக்கும் ஐபோன் பயனராக இருந்தால் உங்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச தள்ளுபடியின் பட்டியல் இங்கே

Iphone 12 discount trade in bank credit exchange offers in India tamil news 
Iphone 12 offer in India

Iphone offers in India Tamil News: அக்டோபர் 23-ம் தேதி ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்கள், இந்தியாவில் முன்கூட்டிய ஆர்டர் செய்யும் வகையில் கிடைத்தன. ஆனால், சில நாட்களிலேயே இந்த ஸ்டாக் முடிந்துவிட்டது. ஐபோன் 12, ரூ.79,990 விலையிலும், ஐபோன் 12 ப்ரோ ரூ.1,19,000 விலையிலும் கிடைத்தன. இருப்பினும், வங்கி சலுகைகளுடன் பல தள்ளுபடிகளுடன் இந்த சமீபத்திய ஐபோன் மாடல்களை வாங்குவதற்கான முறையை நீங்கள் மேலும் எளிதாக்க முடியும்.

ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று ஐபோன் 12-க்கான பகுதிக்குச் செல்லும்போது, பழைய ஐபோன் எக்ஸ்ஆருக்கு ஆப்பிள் டிரேட்-இன் மூலம் ரூ.22,000 வரை தள்ளுபடி பெறலாம். 256 ஜிபி ஐபோன் XS, தள்ளுபடியில் ரூ.32,000 வரை குறைத்து மேலும், ஐபோன் 12-ன் விலையை ரூ.47,900-ஆகக் குறைத்தது. 128 ஜிபி ஐபோன் 11 மாடலுக்கு, விலை வர்த்தகம் ரூ.34,000 வரை இருந்தது.

Iphone 12 discount trade in bank credit exchange offers in India tamil news 
iPhone 12 offers in India

உங்களிடம் எச்.டி.எஃப்.சி கிரெடிட் / டெபிட் கார்டுகள் இருந்தால், மிகவும் மலிவு விலையில் போன்களை பெறலாம். ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோவுக்கு முறையே ரூ.6,000 மற்றும் ரூ.5,000 கேஷ்பேக் வழங்குகிறது. வங்கி தள்ளுபடி மற்றும் வர்த்தகத்திற்குப் பிறகு, புதிய ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 ப்ரோவை முறையே ரூ.39,900 மற்றும் ரூ.80,900-க்கு பெறலாம்.

Iphone 12 discount trade in bank credit exchange offers in India tamil news 
Iphone 12 Exchange offers Tamil News

டிரேட்-இன் விருப்பம் ஐபோன் 5 போன்ற சாதனங்களுக்கும் இருக்கிறது. நீங்கள் ஏற்கெனவே இருக்கும் ஐபோன் பயனராக இருந்தால் உங்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச தள்ளுபடியின் பட்டியல் இங்கே

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் – ரூ 63,000
ஐபோன் 11 ப்ரோ – ரூ .60,000
ஐபோன் 11 – ரூ 37,000
ஐபோன் XS மேக்ஸ் – ரூ .35,000
ஐபோன் XS – ரூ 34,000
ஐபோன் XR  – ரூ .24,000
ஐபோன் X – ரூ .28,000
ஐபோன் 8 ப்ளஸ் – ரூ .21,000
ஐபோன் 8 – ரூ .17,000
ஐபோன் 7 பிளஸ் – ரூ .17,000
ஐபோன் 7 – ரூ .12,000
ஐபோன் 6s ப்ளஸ் – ரூ .9,000
ஐபோன் 6s  – ரூ .8,000
ஐபோன் 6 ப்ளஸ் – ரூ .8,000
ஐபோன் 6 – ரூ .6,000
ஐபோன் SE  (முதல் தலைமுறை) – ரூ .5,000
ஐபோன் 5s – ரூ .3,000

பழைய ஐபோன் மாடல் மற்றும் அதன் நிலையைப் பொறுத்து இந்த விலைகள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், ஐபோன் SE 2020 பட்டியலில் இல்லை என்பதையும் பார்க்கலாம். மேலும், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாடல்களை மேம்படுத்தும் ஒருவராக இருந்தால், ஐபோன் 12 ப்ரோவை ஏறக்குறைய பாதி விலைக்குப் பெறலாம். இந்த சலுகைகள் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றிற்கும் செல்லுபடியாகும். நவம்பர் 6 முதல் ப்ரீ புக்கிங் செய்யலாம்.

Iphone 12 discount trade in bank credit exchange offers in India tamil news 
Iphone greatest offer in India

எக்ஸ்சேஞ் சலுகை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் உண்டு. ஒன்ப்ளஸ் 5 உடனடி தள்ளுபடி ரூ.6,045 கிடைக்கும். புதிய மாடல்களுக்கான சலுகையில் சிறந்த ஒப்பந்தங்களும் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Iphone offers in india tamil news iphone 12 discount trade in bank credit exchange offers in india

Next Story
3 மாதம் தொல்லையே இல்லை: ரூ600 விலைக்குள் பெஸ்ட் பிரீபெய்ட் ஆஃபர்ஸ் இவைதான்!Jio, Airtel, vodafone idea prepaid plans in rs 600 Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com