இந்த ஆண்டு செப்டம்பரில், பூமிக்கு அருகில் உள்ள பென்னு என்ற சிறுகோளில் இருந்து முதல் மாதிரிகளை பெறுவதில் நாசா வெற்றி பெற்றது. இது அதன் OSIRIS-REx விண்கலத்தால் செயல்படுத்தப்பட்டது, இது 7 வருட பயணத்தை முடித்த பின்னர் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது.
இதே வழியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இப்போது ஒரு லட்சிய பணியைத் திட்டமிட்டுள்ளது. அதில் விண்வெளி நிறுவனம் சந்திரனில் இருந்து மண் அல்லது பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டம் லூனார் சேம்பிள் ரிட்டன் மிஷன் (LSRM) என்று அழைக்கப்படுகிறது.
இதுவரை, அனைத்து சந்திரயான் பணிகளும் நிலவின் மேற்பரப்பு, மண் மற்றும் மாதிரிகளை அதன் பேலோடு கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்துள்ளன. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி தரையிறங்கி சாதனை படைத்தது.
இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் (எஸ்ஏசி) இயக்குனர் நிலேஷ் தேசாய் வெள்ளிக் கிழமை கூறுகையில், "இஸ்ரோ இப்போது ஒரு பெரிய பணியைத் திட்டமிட்டுள்ளது. அதில் சிவசக்தி புள்ளியில் இருந்து பாறை அல்லது மண் மாதிரிகளை சேகரித்து பின்னர் அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும்படி திட்டமிடப்படுகிறது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில், இந்த சவாலான பணியை எங்களால் செய்ய முடியும் என்று நம்புகிறோம், ” என்று கூறினார்.
முதன்மையாக, இந்தப் பணியில் 4 தொகுதிகள் இருக்கும் - டிரான்ஸ்வர் தொகுதி, லேண்டர் தொகுதி, அசெண்டர் தொகுதி மற்றும் ரீ-என்டரி தொகுதிகள் வைக்கப்படும். இதற்கு 2 தனித்தனி ராக்கெட் தேவைப்படும்.
"ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (ஜி.எஸ்.எல்.வி) மார்க்-II டிரான்ஸ்வர் மற்றும் ரீ-என்டரி தொகுதிக்கு பயன்படுத்தப்படும். அதேசமயம், லான்ச் வெஹிக்கிள் மார்க்-III நேரடி அசெண்டர் தொகுதி மற்றும் லேண்டர் தொகுதிக்குப் பயன்படுத்தப்படும் என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/isros-next-ambitious-plan-collect-soil-samples-from-moon-9032397/
தற்போதுள்ள மிஷன் டிசைன் படி, சிவசக்தி புள்ளியில் ரோபோடிக் ஆர்ம் மெக்கானிசம் பயன்படுத்தி மண் மாதிரிகள் சேகரிக்கப்படும். மாதிரிகள் முதலில் அசெண்டர் தொகுதிக்கு மாற்றப்படும் அல்லது ஏற்றப்படும். அசெண்டர் தொகுதி சந்திர மேற்பரப்பில் இருந்து புறப்பட்டு அது டிரான்ஸ்வர் தொகுதியுடன் இணைக்கப்படும். இங்கே, மற்றொரு ரோபோடிக் ஆர்ம் பயன்படுத்தி அசெண்டர் தொகுதியிலிருந்து ரீ-என்டரி தொகுதிக்கு மாதிரிகள் மாற்றப்படும். இறுதியாக டிரான்ஸ்வர் மற்றும் ரீ-என்டரி தொகுதி பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்படும் என்று கூறினார்.
சந்திரயான்-3 போன்ற LSRM ஆனது ஒரு சந்திர நாளுக்கு (14 பூமி நாட்கள்) திட்டமிடப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு மிஷன் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.