ஐவூமி-யின் எம்.இ 4, எம்.இ 5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

ஐவூமி நிறுவனமானது எம்.இ 4(Me 4), எம்.இ 5(Me 5 ) என்ற இரண்டு ஸ்மார்டபோன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐவூமி நிறுவனமானது எம்.இ 4(Me 4), எம்.இ 5(Me 5 ) என்ற இரண்டு ஸ்மார்டபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐவூமி(iVoomi) இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் நுழைந்தது. இந்த நிலையில், தற்போது ஐவூமி நிறுவனமானது எம்.இ 4(Me 4), எம்.இ 5(Me 5 ) என்ற இரண்டு ஸ்மார்டபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பிரத்யேகமாf ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்மார்போன்ககளில் எம்.இ 4-ன் விலை ரூ. 3499 என்றும், எம்.இ 5-ன் விலை ரூ.4499 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐவூமி அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு ஸ்மர்ட்போன்களில் எம்.இ 5, கொஞ்சம் அதிக சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.

எம்.இ 5-ன் சிறப்பம்சங்கள்

 • 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
 • ரிசொலூசன் 1280 x 720 பிக்சல்ஸ்,
 • குவாட் கோர் ப்ராசஸர்
 • 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி ஸ்டோரேஜ் (மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 128 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ளலாம் )
 • 3000mAh திறன் கொண்ட பேட்டரி
 • ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்-ல் இயங்கக் கூடியது
 • எல்.இ.டி ப்ளாஷ் லைட்டுடன் கூடிய 8 எம்.பி ரியர் கேமரா
 • 5 எம்.பி கொண்ட செல்ஃபி கேமரா
 • 4ஜி வோல்ட்இ சப்போர்ட்
 • இந்த சிறம்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், கார்பன் ஃபிளாக் மற்றும் ஷாம்பெயின் கோல்டு ஆகிய இரண்டு நிறங்களிர்ல வெளிவருகிறது.

இதேபோல ஐவூமி வெளியிட்டுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான எம்.இ 4-ன் சிறப்பம்சங்களை காணலாம் வாருங்கள்.

 • 4.5 டிஸ்ப்ளே, ரிசொலூசன் 854 x 480 பிக்சல்ஸ்
 • குவாட்-கோர் பிராசஸர்
 • 1 ஜி.பி ரேம் மற்றும் 8ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 64 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்)
 • ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் -ல் இயங்கக் கூடியது
 • 2000mAh பேட்டரி திறன்
 • 22 பிராந்திய மொழிகள் உள்ளன
 • 4ஜி வோல்ட்இ சப்போர்ட்
 • எல்.இ.டி ப்ளாஷ் லைட்டுடன் கூடிய 5 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா
 • இந்த ஸ்மார்ட்போனானது, ஷாம்பெயின் கோல்டு, ஸ்லேட் க்ரே, மிட்நைஃட் ப்ளாக் ஆகிய 3 நிறங்களில் வெளிவருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close