முதலில் நீங்கள் வெற்றிபெறவில்லை என்றால், முயற்சிக்கவும், மீண்டும் முயற்சிக்கவும். இது குறிப்பாக விண்வெளி திட்டங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். டோக்கியோவை தளமாகக் கொண்ட தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஐஸ்பேஸின் ஹகுடோ-ஆர் (Hakuto-R) லூனார் லேண்டர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலவில் தரையிறங்க முயன்ற போது விழுந்து நொறுங்கியது. ஆனால் நிறுவனம் அதற்கு முன்னதாகவே அதன் இரண்டாவது பணியை அறிவித்தது.
நிறுவனம் நவம்பர் 16 அன்று அதன் "மைக்ரோ ரோவரின்" இறுதி வடிவமைப்பை வெளியிட்டது. இது ஹகுடோ-ஆர் மிஷன் 2 திட்டத்தில் நிலவுக்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்பேஸ் மிஷன் 2 மைக்ரோ ரோவர் 26 சென்டிமீட்டர் உயரம், 31.5 சென்டிமீட்டர் அகலம், 54 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 5 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். ரோவர், லேண்டரின் உச்சியில் உள்ள பேலோட் பேயில் வைத்து அனுப்பபடும். மேலும் லேண்டர் தரையிறங்கியப் பிறகு ரோவர் ஊர்ந்து செல்ல வசதியாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க ஒரு சிறப்பு வரிசைப்படுத்தல் பொறிமுறையைப் பயன்படுத்தும்.
இரண்டாவது முயற்சியின் போது, நிறுவனம் ஹகுடோ-ஆர் மிஷன் 1-ல் பயன்படுத்திய லேண்டர் வடிவமைப்பு பயன்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மிஷன் 1 திட்டத்தில் கிடைத்த தரவின் இறுதிப் பகுப்பாய்வின் அடிப்படையில் ஐஸ்பேஸ் மிஷன் 2 திட்டத்தில் மேம்பாடுகளை இணைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“