அதிக ஆவலை தூண்டிவந்த ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி கார் சற்றும் எதிர்பாராத விலையில் களமிறங்கி, போட்டி நிறுவனங்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஃபியட் கிறைஸ்லர் குழுமத்தின் அங்கமான ஜீப் நிறுவனம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட செரோக்கி மற்றும் ரேங்லர் ஆகிய இரண்டு மாடல்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தது.
இந்திய சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை இந்நிறுவனத்தால் ஏற்படுத்த முடியாமல் இருந்த காரணத்தால், மகாராஷ்டிர மாநிலம், புனே, ரஞ்சன்கோனில் உள்ள ஃபியட் கிறைஸ்லர் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் ஜீப் காம்பஸ் எஸ்யூவியை தயாரிக்கத் தொடங்கியது. முற்றிலும் உள்நாட்டிலேயே "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த காம்பஸ் எஸ்யூவி-யில் இருக்கும் 65 சதவிகித உதிரிபாகங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவைதான். மேலும் வலதுபக்க ஸ்டீயரிங் அமைப்பு கொண்ட ஜப்பான், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் போன்ற உலக சந்தைகளுக்கும் இந்தியாவில் இருந்துதான் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஸ்போர்ட், லான்ஜிடியூட் மற்றும் லிமிடெட் என்ற மூன்று வேரியண்ட்டுகளில் , பெட்ரோல் மற்றும் டீசல் என 10 மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் எல்இடி பகல்நேர விளக்குகள், 16 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேற்கூரை பிரத்யேக வண்ணத்தில் இரட்டை வண்ணக் கலவையுடன் கிடைக்கும். கருப்பு மற்றும் சாம்பல் வண்ணத்தில் இன்டீரியர் அமைப்பு உள்ளது. இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை கேபின் ஸ்மார்ட் வைட் லெதர் சீட் கதவுகள், எளிமையான டேஷ்போர்டு என அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக் கூடிய ஓட்டுநர் இருக்கை, எலெக்ட்ரானிக் பார்க்கிங் அசிஸ்ட் வசதிகளும் உள்ளன.
சுமார் 178 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டுள்ள இந்த காரில், ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை ஏற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. டாப் வேரியண்ட்டுகளில் எச்ஐடி ஹெட்லைட்டுகள், டியூவல் ஸோன் ஏசி சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார், கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்டவைகள் உள்ளன.
மினிமல் கிரே, எக்சாட்டிக்கா ரெட், ஹைட்ரோ புளூ, வோக்கல் வைட் மற்றும் ஹிப் ஹாப் பிளாக் ஆகிய நிறங்களில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கிடைக்கிறது.
பெட்ரோல்/டீசல் இன்ஜின், மேனுவல்/ஆட்டோமேட்டிக், 2 வீல் டிரைவ் - 4 வீல் டிரைவ் எனப் பல ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும் காம்பஸ், மினி கிராண்ட் செரோக்கி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது.
ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 6 ஏர் பேக்குகள், இபிடி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட 50 பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன
ஜீப் காம்பஸின், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 173 bhp பவர் மற்றும் 35 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. அதேபோல், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 162 bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு DDCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என 2 கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.
விலை விவரம்:
1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்: (162bhp/25kgm)
**1.4 மல்டி ஏர் ஸ்போர்ட் - ரூ. 14.95 லட்சம்
**1.4 மல்ட்டி ஏர் லிமிட்டெட் (AT) - ரூ. 18.70 லட்சம்
**1.4 மல்டி ஏர் லிமிட்டெட் (AT) (O) - ரூ. 19.40 லட்சம்
2.0 லிட்டர் டீசல் இன்ஜின்: (173bhp/35kgm)
**2.0 மல்டி ஜெட் ஸ்போர்ட் - ரூ. 15.45 லட்சம்
**2.0 மல்டி ஜெட் லாங்கிடியூட் - ரூ. 16.45 லட்சம்
**2.0 மல்டி ஜெட் லாங்கிடியூட் (O) - ரூ. 17.25 லட்சம்
**2.0 மல்டி ஜெட் லிமிட்டெட் - ரூ. 18.05 லட்சம்
**2.0 மல்டி ஜெட் லிமிட்டெட் (O) - ரூ. 18.75 லட்சம்
**2.0 மல்டி ஜெட் லிமிட்டெட் 4x4 - ரூ. 19.95 லட்சம்
**2.0 மல்டி ஜெட் லிமிட்டெட் 4x4 (O) - ரூ. 20.65 லட்சம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.