முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) நிறுவனத்தின் 45ஆவது ஆண்டு கூட்டம் (Annual General Meeting)இன்று (ஆகஸ்ட் 29) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் எதிர்கால முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அடுத்த நிதியாண்டு மற்றும் வருங்காலத்திற்கான திட்டங்களை வகுக்கின்றனர்.
கடந்தாண்டு நடந்த ஏஜிஎம் கூட்டத்தில், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவை மற்றும் மலிவு விலையில் 5ஜி போனுக்கான திட்டங்களை அறிவித்தது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி நெட்வொர்க் சேவை அறிமுக தேதி, 5ஜி ஸ்மார்ட்போன், குறைந்த விலை லேப்டாப் ஜியோபுக் என்று கூறப்படும் லேப்டாப் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்றைய கூட்டம்
இன்றைய கூட்டத்தில் ஜியோ 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கான தேதி, 5ஜி பேக் திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் 5ஜி சேவை திட்டங்களை வழங்குவதை நிறுவனம் இலக்காக கொண்டிருப்பதாக கூறியுள்ளது.
2G-mukt இந்தியாவின் படி கடந்த ஆண்டு நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜியை கூகுளுடன் இணைந்து அறிமுகப்படுத்தியது. ரூ.10,000க்கு கீழ் என விலை நிர்ணயிக்கப்பட்ட ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு OS உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு 5ஜி ஜியோ ஸ்மார்ட்போனுக்கான திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஜியோபோன் 5ஜி (JioPhone 5) என இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான விவரங்கள் இல்லை. போன் குறைந்த விலை மற்றும் சிறந்த தரத்துடன் இருந்தால் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கேம் சேஞ்சராக இருக்கலாம். ஏர்டெல், வோடாபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகியவை 5ஜி ஏலத்தில் பங்கேற்று அலைவரிசைகளை வாங்கின.
ஜியோபோன் 5ஜியில் குறைந்த அலைவரிசை பயன்படுத்தும்படியான அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஏஜிஎம் 2022 நிகழ்ச்சி லைவ் பார்ப்பது எப்படி?
இன்று பிற்பகல் 2 மணி முதல் நிகழ்ச்சி லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. ரிலையன்ஸ் அப்டேட்ஸ் யூடியூப் சேனலில் இலவசமாக பார்க்கலாம்.
அதேபோல், ஜியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. ‘RILAGM’ மற்றும் ‘WeCare’ என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி ட்விட்டரிலும் பார்க்கலாம் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“