Advertisment

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்: ஜியோ 6 புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்

Jio prepaid plans with Disney+ Hotstar subscription: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கி உள்ள நிலையில் ஜியோ பயனர்களை கவரும் வகையில் 6 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

author-image
sangavi ramasamy
New Update
Reliance Jio

உலகக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடங்கி உள்ள நிலையில் ஜியோ பயனர்களை கவரும் வகையில் 6 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கனை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச மொபைல் சந்தா திட்டத்துடன் அறிமுகம் செய்துள்ளது.  இந்த திட்டத்தில் பயனர்கள்  HD (720p)  ஸ்ட்ரீமிங் குவாலிட்டியுடன் கிரிக்கெட் வீடியோ பார்க்க முடியும். 

Advertisment

ரூ.328,  ரூ.388,  ரூ.759,  ரூ.808,  ரூ.598, மற்றும் ரூ.3,178 என்ற விலையில் பல்வேறு சலுகைகள் மற்றும் 3-12 மாத ஹாட்ஸ்டார் வேலிட்டியுடன் ஜியோ திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

 ரூ.328  திட்டம் 

 1.5 ஜிபி 4ஜி டேட்டா/நாள் மற்றும் 28 நாட்கள் பேக் வேலிடிட்டி மற்றும் 3 மாதங்களுக்கு Disney+ Hotstar சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோல், ரூ.388 திட்டமானது மூன்று மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான வருடாந்திர சந்தாவை நீங்கள் விரும்பினால், 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.598 திட்டத்தை பயன்படுத்தலாம். இதேபோல், ஜியோவின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது, இதன் விலை ரூ.3178 தினசரி டேட்டா கேப் 2 ஜிபி ஆகும். 

கடைசியாக,  3 மாதங்கள் (84 நாட்கள் வேலிடிட்டி) செல்லுபடியாகும் இரண்டு கூடுதல் திட்டங்கள் உள்ளன, அவை ரூ.758 திட்டமானது 3 மாத ஹாட்ஸ்டார் சந்தாவுடன் 1.5/2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ரூ.808 விலையில் 3 மாத ஹாட்ஸ்டார் சந்தாவுடன் தினமும் 2  ஜிபி டேட்டா வழங்குகிறது. 

எனினும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது. 420p தரத்தில் மொபைல் வெர்ஷனில் ஸ்ட்ரீமிங் செய்கிறது. ஆனால் நீங்கள் கிரிக்கெட் உடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மைகளைப் பெற ஜியோ பயனராக இருந்தால் இந்த ரீசார்ஜ் திட்டத்தைப் பயன்படுத்தலாம். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Jio Recharge Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment