ரிலையன்ஸ் ஜியோ தனது 7-வது ஆண்டு விழாவை முன்னிட்டு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ தனது 7-வது ஆண்டை நிறைவு செய்து 8-வது ஆண்டைத் தொடங்கும் நிலையில் குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களுடன் கூடுதல் மொபைல் டேட்டா மற்றும் தள்ளுபடி வவுச்சர்கள் போன்ற சிறப்புப் பலன்களை வழங்குகிறது. செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 30 வரை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும். ரூ.299, ரூ.749, ரூ. 2999 ரீசார்ஜ் திட்டங்களில் இந்த சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது.
ரூ.299 திட்டம்
28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 2 ஜிபி மொபைல் டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்கும் ரூ.299 திட்டத்துடன் செல்லும் ஜியோ பயனர்களுக்கு 7 ஜிபி கூடுதல் மொபைல் டேட்டா கிடைக்கும்.
ரூ.749 திட்டம்
அதே பலன்களுடன், அதிக வேலிடிட்டி உள்ள திட்டத்தை எதிர்பார்த்தால் ரூ.749 திட்டம் சரியானதாக இருக்கும். இந் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 2ஜிபி மொபைல் டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இது 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. 7-வது ஆண்டு கொண்டாட்டாக இந்த திட்டத்தில் கூடுதலாக 14 ஜிபி மொபைல் டேட்டாவைப் பெறலாம்.
ரூ.2,999 திட்டம்
பட்டியலில் மிகவும் விலையுயர்ந்த ரூ.2,999-ஆண்டுத் திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள், 2.5ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் போன்ற பலன்களுடன் வருகிறது.
அதிக சலுகைகள்
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு 21 ஜிபி கூடுதல் டேட்டா, ரூ. 800 வரை நெட்மெட்ஸில் 20 சதவீதம் தள்ளுபடி, ரூ. 100 மதிப்புள்ள ஸ்விக்கி கூப்பன், ரூ. 149 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களில் இலவச மெக்டொனால்டு மீல்ஸ் உணவு, ரிலையன்ஸ் டிஜிட்டலில் 10 சதவீதம் தள்ளுபடி, விமானங்களில் ரூ. 1,500 வரை தள்ளுபடி மற்றும் Yatra.com முன்பதிவுகளில் ரூ. 4,000 வரை ஹோட்டல்களில் 15 சதவீதம் தள்ளுபடி என பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
ரீசார்ஜ் செய்த பின் இந்த வவுச்சர்களை MyJio ஆப் சென்று ரிடீம் செய்ய வேண்டும். ‘மெனு’ ஆப்ஷனைக் கிளிக் செய்து இந்த வவுச்சர் பலன்களைப் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“