ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) புதிய வயர்லெஸ் இணைய சேவை நாளை (செப்.19) அறிமுகம் செய்யப்படுகிறது. இது பிரத்யேகமாக வீடு மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படுகிறது. வயர்லெஸ் சேவையாக வழங்கப்படும் இது 1.5 ஜி.பி.பி.எஸ் வேகத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
1.5 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் பயனர்கள் தடையின்றி அதிக வீடியோ ஸ்ட்ரீம் செய்ய எனக் கூறியுள்ளது.
ஜியோ பைபர் Vs ஜியோ ஏர்ஃபைபர்
1. தொழில்நுட்பம்
ஜியோ ஃபைபர் அதன் கவரேஜிற்காக வயர்டு ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் ஜியோ ஏர்ஃபைபர் பாயின்ட்-டு-பாயிண்ட் ரேடியோ இணைப்புகளைப் பயன்படுத்தி வயர்லெஸ் அணுகுமுறையை வழங்கும். தன் பொருள், ஜியோ ஏர்ஃபைபர், வீடுகள் மற்றும் அலுவலகங்களை நேரடியாக ஜியோவுடன் வயர்லெஸ் சிக்னல்கள் மூலம் இணைக்கிறது.
2. ஸ்பீடு
ஜியோ ஃபைபரின் 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தை மிஞ்சும் வகையில் ஜியோ ஏர் ஃபைபர் ஆனது 1.5 ஜி.பி.பி.எஸ் வரையிலான இணைய வேகத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
3. இன்ஸ்டலேசன்
ஜியோ ஏர்ஃபைபர் பிளக் அண்ட்-ப்ளே செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பயனர்களுக்கு ஏற்றதாகவும் வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடியதாகவும் உள்ளது. மறுபுறம், ஜியோ ஃபைபருக்கு ப்ரோவெஸ்னல் இன்ஸ்டலேசன் தேவைப்படுகிறது.
4. விலை
ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோராயமாக ரூ.6,000 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“