ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல்: பெஸ்ட் 1 ஜி.பி டேட்டா ப்ளான் தருவது எந்த நெட்வொர்க்?

ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர் முன்னனி தொலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகியவை கடும்போட்டியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

Smartphones, Reliance Jio, Vodafone, Idea, BSNL, Best 1 GB data Per Day Plans,

ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர் முன்னனி தொலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகியவை கடும் போட்டியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. முதலில் இலவச 4ஜி சேவை மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்த ஜியோ, பின்னர் கவர்சியான ஆஃபர்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜியோ அறிவித்த “டிரிபிள் கேஷ்பேக் ஆஃபர்” மூலம் ரூ.2,599 வரை கேஷ்பேக் பெற முடியும் என ஜியோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது மற்ற நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை வசப்படுத்தும் வகையில் உள்ளது என்ற போதிலும், ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள சிறந்த ஆஃபர்களை வழங்குகின்றன. நாள்தோறும் 1 ஜி.பி என்ற ப்ளான் வேண்டும் என நினைப்பர்களுக்கான தகவல் தான் இது.

ஜியோ (Jio 1GB data per day plans)

ரிலையன்ஸ் ஜியோவைப் பொறுத்தவரையில் நாள்தோறும் 1 ஜி.பி என்ற ப்ளான், பல்வேறு வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. தீபாவளியையொட்டி மாற்றப்பட்ட டேரிஃப்-ன் படி, ரூ.309 ப்ளானில் நாள்தோறும் 1 ஜி.பி வீதம் 49 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. இதேபோல, ரூ.399 ப்ளானில் நாள்தோறும் 1 ஜி.பி வீதம் 70 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது.

Reliance Jio, Smartphones, Reliance, Mukesh Ambani, Triple Cash Back Offer, For Jio Prime Members,

ரூ.459 ப்ளானில் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா வீதம் 84 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா என 91 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.499 ப்ளானும் உள்ளது. ஜியோவின் இந்த ப்ளான்களில் இலவச கால்ஸ் , 3000 எஸ்.எம்.எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்- போன்றவையும் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

ஏர்டெல் (Airtel 1GB data per day plans)

ஏர்டெல் நிறுவனமானது நாள்தோறும் 1ஜி.பி டேட்டா என்ற வகையில் இரண்டு ப்ளான்களை வழங்குகிறது. ரூ.399 ப்ளானில் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா, லோக்கல்- எஸ்.டி.டி கால்ஸ் ஆகியவை 70 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது.

Smartphones, Reliance Jio, Vodafone, Idea, BSNL, Best 1 GB data Per Day Plans,

இதேபோல, 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.448 ப்ளானில் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா, லோக்கல்-எஸ்.டி.டி கால்ஸ், ரோமிங்-ன் போது இலவச அவுட்-கோயிங் கால்ஸ் மற்றும் நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. ஒருவேளை, 1 ஜி.பி-க்கும் அதிமாக டேட்டா வேண்டும் என்றால், அதற்கும் ப்ளான் உள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.349 ப்ளானில் நாள்தோறும் 1.5 ஜி.பி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ப்ளான்கள் அனைத்திலும் வழங்கப்படும் கால்ஸ் நாள்தோறும் 250 நமிடங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்பது கவனிக்கத்தக்கது.

வோடபோன் (Vodafone 1GB data per day plans)

ஏர்டெல் போன்றே வோடபோன் நிறுவனமும் நாள்தோறும் 1ஜி.பி என்ற வகையில் இரண்டு ப்ளான்களை வழங்குகிறது. ரூ.348 மற்றும் ரூ.392 என்ற இரண்டு ப்ளான்களிலும் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா வீதம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன.

Smartphones, Reliance Jio, Vodafone, Idea, BSNL, Best 1 GB data Per Day Plans,

ரூ.392 ப்ளானில் ரோமிங்-ன் போது இலவசமாக அவுட்-கோயிங் கால்ஸ் செய்து கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தக்கது. டெல்லி என்.சி.ஆர் சர்கிளை தவிர்த்து மற்ற அனைத்து சர்கிள்களிலும் ரூ.348 ப்ளானில் நாள்தோறும்1.5 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.என்.எல் (BSNL 1GB data per day plan)

ஜியோவுடன் போர் புரியும் வகையில் பி.எஸ்.என்.எல் கொண்டுவந்துள்ளது.  ரூ.429 ப்ளானில் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா வீதம் 90 ஜி.பி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து நெட்வொர்க் கால்ஸ் இலவசம்.

Smartphones, Reliance Jio, Vodafone, Idea, BSNL, Best 1 GB data Per Day Plans,

ஐடியா (Idea 1GB data per day plan)

ஐடியாவின் ரூ.357 ப்ளானில் நாள்தோறும் 1 ஜி.பி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ் ஆகியவை 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது.

Smartphones, Reliance Jio, Vodafone, Idea, BSNL, Best 1 GB data Per Day Plans,

இதே சலுகைகள் கொண்ட ஐடியாவின் மற்றொரு ரூ.498 ப்ளான் 70 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio airtel vodafone idea bsnl the best 1gb data per day plans

Next Story
சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு!Xiaomi, Smartphones, Xiaomi Redmi Note
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express