ரிலையன்ஸ் ஜியோ ரூ.2878 என்ற விலையில் 1 வருட வேலிடிட்டி உடன் பிரத்யேகமாக டேட்டா ஆட்-ஆன் பேக் வழங்குகிறது. அதாவது 365 நாட்கள் உங்கள் ப்ரீபெய்ட் டேட்டா போக கூடுதலாக 2 ஜிபி டேட்டாவைப் பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என்ற முறையில் திட்டங்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப 1,3 மற்றும் 1 வருடம் என்ற வகையில் திட்டங்களை வழங்குகிறது. வேலிடிட்டி காலத்தை பொறுத்து திட்டங்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ப்ரீபெய்ட் திட்டத்தில் வரும் டேட்டா தீர்ந்துவிட்டால் கூடுதலாக பணம் செலுத்தி டேட்டா ஆட்-ஆன் பேக் பயன்படுத்தலாம்.
அந்த வகையில், எவ்வித சலுகைகளும் இல்லாமல் முழுக்க முழுக்க 1 வருடத்திற்கு ஜியோ டேட்டா ஆட்-ஆன் பேக் வழங்குகிறது. பொதுவாக ரீசார்ஜ் திட்டங்களில் ஓ.டி.டி சந்தா, காலர் ட்யூன் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். ஆனால் இந்த டேட்டா ஆட்-ஆனில் எவ்வித சலுகைகளும் இல்லாமல் 1 வருடத்திற்கான கூடுதல் டேட்டா மட்டும் வழங்குகிறது.
ரூ.2878 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2878 திட்டம் 1 வருடத்திற்கான முழுமையான டேட்டா ஆட்-ஆன் திட்டமாகும். அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் மொத்த டேட்டா 730ஜிபி ஆகும்.
இந்த திட்டத்தில் வேறு எந்த நன்மைகளும் வழங்கப்படவில்லை. எனினும் இந்த டேட்டா ஆட்-ஆன் பெற பயனர்கள் முன்னதாக ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“