ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ப்ரீபெய்ட், போஸ்பெய்ட் என்ற வகையில் ரீசார்ஜ் திட்டங்களை பயனர்களின் வசதிக்கு ஏற்ப வழங்குகிறது. 130க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோ தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. தற்போது எக்சிஸ்டிங் ரீசார்ஜ் திட்டத்துடன் இலவமாக 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜியோ தனது ரூ.999 எக்ஸ்பென்சிவ் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் இதுவரை வழங்கப்பட்டு வந்த கூடுதல் டேட்டா சலுகையை நீக்கியுள்ளது.
40ஜிபி போனஸ் டேட்டா சலுகை நீக்கம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்/ஒரு நாளைக்குப் பெறலாம். இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்நிலையில் இந்த திட்டத்தில் ஜியோ தனது பயனர்களுக்கு கூடுதலாக ரூ. 241 மதிப்பிலான 40 ஜிபி போனஸ் டேட்டா சலுகையை வழங்கி வந்தது. இந்த திட்டம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் (ஐபிஎல் 2023 இல்), குறிப்பிட்ட காலத்திற்கு இந்த போனஸ் டேட்டா சலுகை இருக்கும் என்றும் ஜியோ குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கூடுதல் டேட்டா சலுகையை ஜியோ தற்போது நீக்கியுள்ளது. தினசரி 3ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும். கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் Add on டேட்டா சலுகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“