இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் முதற்கட்டமாக 5ஜி சேவையை மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தினர். தற்போது அதை பல்வேறு நகரங்களில் படிப்படியாக விரிவுபடுத்தி வருகின்றனர். ஜியோ 85 நகரங்களில் தனது 5ஜி சேவையை வழங்கி வருகிறது. ஏர்டெல் 22 நகரங்களில் வழங்கி வருகிறது. ஜியோ நாளுக்கு நாள் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையில், ஜியோ முதல் முறையாக 5ஜி டேட்டா பேக் விவரங்களை வெளியிட்டுள்ளது. 4ஜியை விட விலை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஜியோ ரூ.61-க்கு 5ஜி டேட்டா பேக்கை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இந்த பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு உள்ளது போலவே தான் உங்கள் ஆக்டிவ் ப்ளான் முடிவடையும் வரை 5ஜி பேக் வேலிடிட்டி இருக்கும். ரூ.61 5ஜி டேட்டா பேக் ரூ.119, ரூ.149, ரூ.179, ரூ.199 மற்றும் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு பொருந்தும்.
ஜியோ ஸ்டேண்ட் அலோன் 5ஜி
5ஜி பயன்படுத்த புதிய சிம் வாங்கத் தேவையில்லை. உங்கள் பகுதியில் 5ஜி கிடைத்தவுடன், உங்கள் போன் 5ஜி ஆதரவு கிடைத்தவுடன் மொபைல் நெர்வோர்க் செட்டிங்சிஸ் மாற்றம் செய்து 5ஜி பயன்படுத்தலாம். ஜியோ சமீபத்தில் ஆக்ரா, கான்பூர், பிரயாக்ராஜ், மீரட், திருப்பதி, நெல்லூர், கோழிக்கோடு, திருச்சூர், நாக்பூர் மற்றும் அகமதுநகர் ஆகிய 10 நகரங்களில் 5G சேவையை அறிமுகப்படுத்தியது. ஜியோ டிசம்பர் 2023-க்குள் இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் 5ஜி சேவை வழங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் ஸ்டேண்ட் அலோன் 5ஜி (standalone 5G) சேவையை வழங்குகிறது. அதேநேரம் ஏர்டெல் நான்- ஸ்டேண்ட் அலோன் 5ஜி சேவையை (non-standalone 5G) வழங்குகிறது.
ஜியோவின் ஸ்டேண்ட் அலோன் 5ஜி நெட்வொர்க்குடன் ஒப்பிடும் போது நான்- ஸ்டேண்ட் அலோன் 5ஜி மெதுவான டவுன்லோடு வேகம் மற்றும் அதிக தாமத்தை வழங்குகிறது. இருப்பினும் 4ஜியை விட வேகமான டவுன்லோடு வேகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/