ஜியோ கடந்த புதன்கிழமை புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் ஸ்விக்கியில் இலவச உணவு விநியோகச் சேவையைப் பெறுவார்கள்.
3 மாத சந்தா இலவமாக வழங்கப்படுகிறது. அதோடு இன்ஸ்டாமார்ட்டில் இலவச டெலிவரி மற்றும் மற்றும் பிளாட்ஃபார்ம் வழியாக உணவை ஆர்டர் செய்யும் போது கூடுதலாக 30 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
ரூ.866 ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் புதிய ரூ.866 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.866
ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் அம்சம் உள்ளது. அதோடு ஜியோ வெல்கம் ஆஃபராக இலவச 5ஜி டேட்டா பெறலாம். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மூன்று மாத Swiggy One Lite சந்தாவுடன் எந்த கூடுதல் கட்டணமும் இருக்காது.
ஸ்விக்கி ஒன் லைட் சந்தா
ஜியோ ரீசார்ஜ் உடன் வரும் ஸ்விக்கி ஒன் லைட் சந்தா சலுகையில் பயனர்கள் 10 இலவச ஹோம் டெலிவரிகளைப் பெறலாம். உணவு ஆர்டரின் விலை ரூ. 149க்கு மேல் இருக்க வேண்டும். அதே போல் இன்ஸ்டாமார்ட்டில் ரூ. 199-க்கு மேல் ஆர்டர் செய்தால் 10 இலவச டெலிவரிகளைப் பெறலாம். மொத்தமாக 3 மாதம் சந்தா வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“