ரிலையன்ஸ் ஜியோ ரூ.119 திட்டத்தை நீக்கியுள்ளது. 2021 பிற்பகுதியில் கட்டண உயர்வுக்குப் பிறகு நிறுவனம் இதை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றை வழங்கியது. ஆனால் இந்த திட்டத்தை நிறுவனம் இப்போது முழுமையாக நீக்கியுள்ளது.
ஜியோ தனது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை ரூ.119-ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தியுள்ளது. ஏர்டெல் சமீபத்தில் தனது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை ரூ.155 ஆக உயர்த்திய நிலையில் ஜியோவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) மேம்படுத்த இந்த நடவடிக்கையை ஜியோ மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஜியோ-வின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் ரூ.149 ஆக உயர்ந்துள்ளது.
ஜியோ ரூ.149 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 திட்டம் 20 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும், பயனர்கள் ஜியோசினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ டிவியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ்/தினமும் 1ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.
ஜியோ ரூ.149 Vs ஏர்டெல் ரூ.155
ஜியோ ரூ.149 திட்டம் ஏர்டெல்லின் குறைந்தபட்ட திட்டமான ரூ.155க்கு மிக அருகில் உள்ளது. ஏர்டெல்லின் திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் 24 நாட்களுக்கு 1ஜிபி மட்டுமே கொண்டுள்ளது.
அதே சமயம் ஜியோ ரூ.149 திட்டம் தினசரி 1 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள், ஆனால் ஏர்டெல் திட்டத்தில் 24 நாட்களுக்குப் பதிலாக 20 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil