scorecardresearch

வருடம் முழுக்க ரீசார்ஜ் கவலை இல்லை: ஜியோ போன் சூப்பர் பிளான்

Jio recharge plans: தற்போதுவரை, நிறுவனம் நான்கு ஜியோபோன் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவை, 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகின்றன.

Jiophone Jio Annual plans list tamil news 
Jio Annual plans list

Jio tamil news, jio recharge plans: ஜியோபோன் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ புதிய ஆண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவின் சமீபத்திய ப்ரீபெய்ட் திட்டங்களுடன், 336 நாட்கள் செல்லுபடியாகும் 504 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் வரம்பற்ற இணையதள அழைப்பும் அடங்கும். ஓர் ஆண்டிற்கான ஜியோபோன் திட்ட விலைகள், ரூ.1,001 முதல் தொடங்குகின்றன. பயனர்கள் தங்கள் ஜியோபோனை மாதாந்திர ரீசார்ஜ் செய்ய விருப்பமில்லை என்றால், அவர்கள் ஆண்டு திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவற்றைப் பற்றி மேலும் பார்ப்போம்.

Jio phone annual plans: ஜியோபோன் ஆண்டு திட்டங்கள்

அன்லிமிடெட் ஜியோவிலிருந்து ஜியோ அழைப்பு மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் பேக்கின் விலை ரூ.1,001. இது ஆண்டு முழுவதும் 49 ஜிபி 4 ஜி டேட்டாவைக் கொண்டுள்ளது. தினசரி டேட்டா வரம்பு 150MB. ஜியோ அல்லாத எண்களுக்கு, FUP வரம்பை 12,000 நிமிடங்களுக்குப் பெறுவீர்கள்.

ரூ.1,301 ஜியோபோன் திட்டம், தினசரி 500MB டேட்டா வரம்புடன் 164 ஜிபி மற்றும் 4 ஜியுடன் வருகிறது. ஜியோ அல்லாத எண்களுக்கு 12,000 நிமிடங்கள் மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ் கொடுக்கப்படுகிறது.

மூன்றாவது ஜியோபோன் ஆண்டு திட்டத்தின் விலை ரூ.1,501. மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களைப் போலில்லாமல், இது தினசரி அடிப்படையில் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

அதாவது, மொத்தம் 504 ஜிபி தரவை 336 நாட்களுக்கு வழங்குகிறது. மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களைப் போலவே, ஜியோ அல்லாத எண்களுக்கு 12,000 நிமிடங்கள் என்ற FUP வரம்புடன் அன்லிமிடெட் ஜியோவிலிருந்து ஜியோ அழைப்பு சலுகையும் உள்ளது.

ஜியோபோன் பயனர்களுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். அனைத்து திட்டங்களின் செல்லுபடியாகும் நாட்கள், 336 என்றில்லை. புதிய வருடாந்திர திட்டங்கள் இன்னும் அதிகாரப்பூர்வ தளத்தில் பட்டியலிடப்படவில்லை மற்றும் இந்தத் தகவல்கள் டெலிகாம் டாக்கிலிருந்து (TelecomTalk) பெறப்பட்டது.

Jio recharge plans: பிற ஜியோபோன் திட்டங்கள்

தற்போதுவரை, நிறுவனம் நான்கு ஜியோபோன் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவை, 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகின்றன. ரூ.75 ஜியோ திட்டமும் உள்ளது. இது, ஒரு மாதத்திற்கு இலவச ஜியோவிலிருந்து ஜியோ அழைப்புகள், 500 இணையமில்லா நிமிடங்கள் மற்றும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.125 ப்ரீபெய்ட் ஜியோ திட்டம் அதே நன்மைகளைத் தருகிறது. ஆனால், ஒரு மாதத்திற்கு 14 ஜிபி தரவை வழங்குகிறது. ரூ.155 ஜியோபோன் திட்டம் 28 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. ரூ.185 திட்டத்தில் 56 ஜிபி டேட்டா அடங்கும். அனைத்து ஜியோபோன் திட்டங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Jio tamil news jio recharge plans jio phone annual plans

Best of Express