5G broadband plans | JIO and Airtel fiber broadband plans | ஜியோ, ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாகும். தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஜியோ 4 நகரங்களிலும் ஏர்டெல் 8 மெட்ரோ நகரங்களிலும் தனது சேவையை வழங்கி வருகிறது.
இருநிறுவனங்களும் மொபைல் இன்டர்நெட் சேவை மட்டுமல்லாது வைஃபை சேவைகளையும் வழங்குகின்றன. ஜியோ ஃபைபர் (Jio Fiber) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் (Airtel Xstream Fiber) என்ற பெயரில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குகின்றன. அந்தவகையில் ரூ. 500-க்கும் குறைவாக ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குகின்றன. அதுகுறித்து பார்ப்போம்.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 விலையில் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை கொண்டுள்ளது. ரூ.499 திட்டத்தில் மாதம் 3300GB டேட்டா 40 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் காலிங் வசதி உள்ளது. இந்த திட்டத்தில் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் (Xstream Premium), வின்க் மியூசிக் (Wynk Music), பாஸ்டேக் (FASTag) போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஜியோ ஃபைபர் திட்டம்
ஜியோ ஃபைபர் ஆனது ரூ.500-க்கு கீழ் 3 விதமான திட்டங்களை வழங்குகிறது. 1 ப்ரீபெய்டு திட்டம், 2 போஸ்ட்பெய்டு திட்டங்கள் ஆகும். ஜியோ ஃபைபர் ப்ரீபெய்டு திட்டம், ரூ.399-க்கு கிடைக்கிறது. இதில், பயனர்கள் 30 எம்பிபிஎஸ் வேகம், மாதம் 3300ஜிபி டேட்டா அனுபவத்தை பெறலாம். இதனுடன் இலவச அன்லிமிடெட் காலிங் வசதி உள்ளது.
போஸ்ட்பெய்டு திட்டம்
ரூ.399 விலையில் உள்ள போஸ்ட்பெய்டு திட்டம், ப்ரீபெய்டு திட்டம் போலவே பயனளிக்கிறது. ஆனால் இந்த சலுகை புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது இந்த சேவை 6 முதல் 12 மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
ஜியோ ஃபைபரின் மற்றொரு போஸ்ட்பெய்டு திட்டம் ரூ.499 விலையில் கிடைக்கிறது. 30 எம்பிபிஎஸ் இணைய வேகத்துடன் கூடுதலாக ஓடிடி வசதிகள் கிடைக்கிறது. யுனிவர்சல்+, அல்ட் பாலாஜி, ஈரோஸ் நவ், லயன்ஸ்கேட், ஜியோ சினிமா, ஷெமரூமீ மற்றும் ஜியோசாவன் போன்ற ஓடிடி தளங்களை இலவசமாக பயன்படுத்த முடியும்.
ஆனால் இந்த போஸ்ட்பெய்டு திட்டமானது ஏர்டெல்லின் ரூ.499 திட்டத்தை விட குறைவான இணைய வேகத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டேட்டாவுடன் ஓடிடி வசதி பெற விரும்புபவர்கள் ஜியோ ஃபைபரை தேர்வு செய்யலாம். ஆனால் இதில் இணைய வேகம் குறைவு என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil