அமேசான் ப்ரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றிக்கு போட்டியாக ஜியோ சினிமா ஓ.டி.டி தளம் பிரீமியம் சந்தாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.999 விலையில் 12 மாத வேலிடிட்டி உடன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக
HBO மற்றும் Warner Bros போன்ற உலகளாவிய ஸ்டுடியோக்களுடன் இணைந்து கேம் ஆஃப் த்ரோன்ஸ், தி லாஸ்ட் ஆஃப் அஸ் போன்ற பிரத்யேக சீரிஸ்களை உயர் தரத்தில் வழங்குகிறது.
ஜியோ சினிமா பயனர்கள் ஆப்ஸ் மூலமாகவோ அல்லது இணைய மூலமாகவோ பிரீமியம் சந்தாவை பெறலாம். ரிலையன்ஸின் மற்றொரு ஆப் ஆன Voot மூலம் சந்தா பெற்றால் ஜியோ சினிமாவிற்கு சில சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஜியோ சினிமா பிரீமியம் சந்தாவில் என்ன இருக்கும்?
ஜியோ சினிமா பிரீமியம் சந்தா திட்டம் 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்டது. உயர்தர வீடியோ மற்றும் ஆடியோவை வழங்குவதாகக் கூறுகிறது. டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன் போன்ற தொழில்நுட்பங்களுடன் 4K தரத்தில் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.
ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், கணினி மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும். அதேபோல் ஒரு அக்கவுண்டை 4 பேர் வரை பயன்படுத்த அனுமதிக்கிறது.
எனினும் தற்போது ஐ.பி.எல் 2023, திரைப் படங்கள், சீரிஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. இனி வரும் நாட்களில் குறைந்த விலையில் சந்தா அறிமுகப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“