இந்தியாவில் ஜியோ நிறுவனம் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. குறைந்த விலையில் ஜியோ 4ஜி ஸ்மார்ட்போன், ஜியோ ஃபைபர் என பலவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் 5ஜி-யை ஜியோ நிறுவனம் ஸ்டாண்ட் அலோன் (Stand alone) என்ற தனித்துவமான முறையில் அறிமுகப்படுத்துகிறது.
இந்நிலையில், ஜியோ நிறுவனம் தீபாவளி ஆஃபர் வெளியிட்டுள்ளது. ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நிறுவனம் '100% வேல்யூ பேக்' என்ற முறையில் 2 திட்டங்களில் சலுகை வழங்கியுள்ளது. அதாவது சுருக்கமாக இது வை-பை- கான ஆஃபர் (Wi-Fi) என்று கூறலாம்.
இந்த ஆஃபர் அக்டோபர் 18 முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை பயன்படுத்தலாம். கூடுதலாக ரூ.6000 மதிப்புள்ள 4K ஜியோ ஃபைபர் செட்-ஆப் பாக்ஸ் (4K JioFiber set top box) முதல் தவணை கட்டணமின்றி பெறலாம். இந்த ஜியோ ஃபைபர் ஆஃபர் 2 திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜியோ ஃபைபர் ஆஃபர் விவரம்
ஜியோ ஃபைபர் புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதம் ரூ.599, மாதம் ரூ. 899 என 6 ஆறு மாத கால அடிப்படையில் 2 திட்டங்களில் சலுகை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.599 திட்டம்
மாதம் ரூ.599 x 6 மாதம் திட்டத்தில், 30Mbps டேட்டா வேகம், 14 OTT ஆப்ஸ், 550 க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு இணைப்பு கிடைக்கும். திட்டத்தின் விலை ரூ. 599 x 6 மாதங்கள் மற்றும் ரூ. 647 ஜிஎஸ்டி என மொத்தமாக ரூ 4,241 செலுத்தி திட்டத்தை பெறலாம்.
'100% வேல்யூ பேக்' (100 per cent value back) பயன்களாக, பயனர்களுக்கு, Ajio-க்கு ரூ.1,000 வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலுக்கு ரூ.1,000 வவுச்சர், NetMeds - ரூ.1,000 வவுச்சர், IXIGO-ரூ.1,500 வவுச்சர் வழங்கப்படும். இதோடு, 6 மாதம் + 15 நாட்கள் (extra validity) கூடுதலாக திட்டத்தின் பயன்களைப் பெறலாம்.
ரூ.899 திட்டம்
மாதம் ரூ.899 x 6 மாதம் திட்டத்தில், 100Mbps டேட்டா வேகம், 14 OTT ஆப்ஸ், 550 க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு இணைப்பு கிடைக்கும். திட்டத்தின் விலை ரூ. 899 x 6 மாதங்கள் மற்றும் ரூ. 971 ஜிஎஸ்டி என மொத்தமாக ரூ 6,365 செலுத்தி திட்டத்தை பெறலாம்.
சலுகைகள்
Ajio-க்கு ரூ.2,000 வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலுக்கு ரூ.500 வவுச்சர், NetMeds - ரூ.5,00 வவுச்சர் மற்றும் IXIGO-ரூ.1,500 வவுச்சர் வழங்கப்படுகிறது.
அதாவது, நீங்கள் பணம் செலுத்தி புதிய ஜியோ ஃபைபர் பெறும் இணைப்புக்கு ஈடாக ஜியோ நிறுவனம் சலுகைகள்( வவுச்சர்களை) வழங்குகிறது. புதிய ஜியோ ஃபைபர் இணைப்பு பெற விரும்புபவர்கள் ஜியோ ஃபைபர் இணையதளத்தில் பதிவு செய்து இணைப்பு பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.