ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ டேக் என்ற பெயரில் ப்ளூடூத் கருவி அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களை தங்கள் பொருட்களை இதில் அட்டாச் செய்வதன் மூலம் தங்கள் பொருட்களின் இருப்பிடத்தை கண்டறிய முடியும்.
ஜியோ டேக் என்ன? இதன் அம்சங்கள் என்ன?
ஜியோ டேக் சிறிய அளவிலான பவர்ஃபுல் ப்ளூடூத் கருவியாகும். இதனுடன் பயனர்கள் தங்கள் பொருட்களை இணைப்பதன் மூலம் தங்கள் பொருட்களின் இருப்பிடத்தை எளிதில் ட்ராக் செய்து கண்டறிய முடியும். ட்ராலி, பேக்குகள், சாவி, மணிபர்ஸ் என அனைத்தையும் இந்த கருவியில் கனெக்ட் செய்து விரைவாக ட்ராக் செய்ய முடியும். வெள்ளை நிறத்தில் 9.5 கிராம் எடையில் இந்த டேக் வழங்கப்படுகிறது. வருட பேட்டரி லைவ், உட்புறத்தில் 20 மீட்டர் மற்றும் வெளிப்புறத்தில் 50 மீட்டர் வரை ட்ராக் செய்ய முடியும்.
பேக், சாவி உள்ளிட்ட பொருட்களை தொலைத்து விட்டால் ஜியோ டேக் இணைக்கப்பட்டிருந்தால் எளிதில் பொருட்களை டேக் செய்து கண்டுபிடிக்கலாம்.
வெளியூர் பயணம் செய்பவர்கள், பொருட்களை அடிக்கடி தொலைத்துவிடுபவர்களுக்கு இந்த கருவி மிகவும் உபயோகமாக இருக்கும். அதே சமயம் உங்கள் விருப்பமான வளர்ப்பு பிராணிகளுக்கும் (நாய், பூனை) இதை பயன்படுத்தலாம். டேக்கை உங்கள் செல்லப் பிராணியிடம் பொருத்துவதன் மூலம் அவற்றையும் நீங்கள் டிராக் செய்யலாம்.
ஜியோ டேக் வாங்கும் போது லான்யார்ட் ஸ்ட்ரிங் மற்றும் ஒரு எக்ஸ்ரா பேட்டரி உடன் வழங்கப்படும்.
ஜியோ டேக் vs ஆப்பிள் ஏர்டேக்
ஜியோ டேக் மற்றும் ஆப்பிள் ஏர்டேக் இரண்டும் ப்ளூடூத் மூலம் இயக்கப்படுகின்றன, ஆனால் அவற்றின் விலை, பயன்பாடு போன்ற பல அம்சங்கள் வேறுபடுகின்றன.
ஜியோ டேக் ஆனது ஆப்பிள் ஏர்டேக்கை விட மிகவும் குறைந்த விலை. ஜியோ டேக் ஒன்றின் விலை ரூ.749க்கும், ஏர்டேக் ஒன்றின் விலை ரூ.3,190க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜியோ டேக் வெளிப்புறத்தில் 50 மீட்டருக்கு ட்ராக் செய்ய முடியும். அதே நேரத்தில் ஏர்டேக் அதன் வரம்பை நீட்டிக்க ஆப்பிளின் Find My நெட்வொர்க் பயன்படுத்துகிறது. ஏர்டேக் IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.
இந்தநிலையில், ஜியோ டேக் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்த முடியும். அதே நேரம் ஏர்டேக் ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“