scorecardresearch

ஸ்மார்ட்போனில் தெர்மோமீட்டர்? கூகுள் பிக்சல் 8 ப்ரோ அசத்தல் தொழில்நுட்பம்

Google Pixel 8 Pro with built-in thermometer: கூகுள் பிக்சல் 8 ப்ரோ இன்பிராரெட் தொழில்நுட்பம் மூலம் இன்-பில்ட் தெர்மோமீட்டர் வசதியை அறிமுகப்பபடுத்த உள்ளது.

Google Pixel 7 Pro,
Google Pixel 7 Pro

கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்பிராரெட் தொழில்நுட்பம் (Infrared technology) பயன்படுத்தி மனிதர்களின் வெப்பநிலையை கண்டறிவதற்கான வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மிகப்பெரிய அப்கிரோடு ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இன்-பில்ட் தெர்மோமீட்டர் வசதியை அறிமுகம் செய்கிறது. அதனால் இந்த ஸ்மார்ட்போனில் சிங்கிள் கேமரா மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. தெர்மோமீட்டரில் எல்இடி ப்ளாஷ்க்கு கீழே கேமரா பட்டியில் தொலைபேசியின் பின்புறத்தில் வெள்ளை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஹார்டுவேர் உங்கள் உடல் வெப்பநிலையை கணக்கிட இன்பிராரெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. அதைப் பயன்படுத்த, நீங்கள் தெர்மோமீட்டரை உங்கள் நெற்றிக்கு அருகில் கொண்டு வர வேண்டும் (ஆனால் ஒட்டி வைக்க கூடாது) அதன் பிறகு போன் பட்டனை கிளிக் செய்து, உங்கள் நெற்றியில் போனை இரு பக்கமும் மாற்றி மாற்றி கொண்டு செல்லவும். இப்போது உங்கள் உடல் வெப்பநிலை கணக்கிடப்படும்.

கூகுள் பிக்சல் 8 ப்ரோ 6.52-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் மற்றும் மேம்படுத்தப்பட்ட டென்சர் ஜி3 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ‘ஜூமா’ என்ற குறியீட்டுப் பெயரில் உள்ளது. பின்புறத்தில், கைபேசியில் சாம்சங் 50எம்பி ISOCELL GN2 கேமரா சென்சார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 8 ப்ரோ இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Leaked google pixel 8 pro video reveals a built in thermometer