லெனோவா தனது அடுத்த தயாரிப்பான "கில்லர் நோட்" ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போது லெனோவா அனுப்பி வரும் அழைப்பின் பின்புறத்தில் 8 என பொறிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கும் போது லெனோவா அறிமுகம் செய்யவிருப்பது K8 என்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்காக #KillerNote என்ற ஹேஸ்டேக் மூலமாக பிரபலப்படுத்தி வருகிறது லெனோவா. முன்னதாக 18 வினாடிகள் கொண்ட டீசர் ஒன்றை லெனோவா வெளியிட்டது. அதில், சாதாரண பெர்ஃபார்மென்ஸ் உள்ள ஸ்மார்ட்போனில் இருந்து விடுதலை பெறுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற தகவல் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை.
லெனோவா K8 நோட் ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, பின்வரும் சிறப்பம்சங்கள் அதில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 5.5 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்பிளே(ரிசொலூசன் 1920 x 1080 பிக்சல்ஸ் )
- ஸ்னாப்டிராகன் 660 ப்ராசஸர்
- 4 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு பயன்படுத்தும் வகையில் இருக்கலாம்)
- ஆண்ட்ராய்டு நௌகட் 7.0
- இது போன்ற சிறப்பம்சங்கள் இருக்கலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான K6 நோட் ரூ.13,999 விலையில் இருந்து தொடங்குகிறது. இரண்டு வகையில் K6 வெளிவருகிறது. அவை 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ரோம், 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ரோம் ஆகும்.
K6 நோட் சிறப்பம்சங்கள்
- டுயல் சிம் ஸ்மார்ட்போனான
K6 நோட் 4,000 mAh பேட்டரி திறனுடன் வெளிவருகிறது.
- 5.5 இன்ச் ஃபுல் எச்.டி ஐபிஎஸ் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 430 ப்ராசஸர்
16 எம்.பி ரியர் கேமரா மற்றும் 8 எம்.பி செல்ஃபி கேமரா ஆகியவை K6 நோட்-ன் சிறப்பம்சங்களாகும்.