லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்! ரூ.12,999 முதல் ஆரம்பம்

இந்த லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் ஆன்லைன் வணிக தளமான அமேசானில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை ரூ.12,999 முதல் தொடங்குகிறது.

Lenovo k8 note

லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் ஆன்லைன் வணிக தளமான அமேசானில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரவுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் லெனோவா கே8 நோட் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போனானது இரண்டு வகைகளில் வெளிவருகிறது. இதன் விலை ரூ.12,999 முதல் தொடங்குகிறது. லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போனாது முதலாவதாக இந்தியாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

  • 5.5 இன்ச் டிஸ்ப்ளே எஃப்.எச்.டி ரெசொலூசன்(1920 x 1080 பிக்சல்ஸ்)
  • டென்-கோர் மீடியாடெக்-ஹெலியோ-எக்ஸ்23 பிராசஸர்
  • 4ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் மற்றும் 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் வெளிவருகின்றன. இவற்றில், மைக்ரோ எஸ்.டி கார்டு பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.
  • 4ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் ரூ.13,999 என்றும், 3ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ் ரூ.12,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • எல்.இ.டி- ப்ளாஷுடன் கூடிய 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
  • ஆண்ட்ராய்டு7.1 நௌகட் இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.
  • டுயல் சிம் வசதியுடன் கூடிய இந்த லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் ரூ.4000 mAh என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனர்
  • 180 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், வெனோம் ப்ளாக், ஃபைன் கோல்டு ஆகிய இரண்டு நிறங்களில் வெளிவரவுள்ளது.
  • மற்ற லெனோவா ஸ்மாட்போன்களுடன் ஒப்பிடுகையில், இந்த லெனோவா கே8 ஸ்மார்ட்போன் தியேட்டர்மேக்ஸ் மற்றுட் டொல்பி ஆடோம் வசதிகளை சப்போர்ட் செய்யக்கூடியது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lenovo k8 note launched in india starts at rs 12999 and sale starts from august

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com