/tamil-ie/media/media_files/uploads/2017/08/lg-q6-759-1.jpg)
எல்.ஜி Q6 (LG Q6) ஸ்மாட்ர்போன் ஆன்லைன் வணிக தளமான அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் இந்த எல்.ஜி Q6 ஸ்மார்ட்போன், விற்பனைக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஜி Q6 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இது குறித்த தகவல்களை பெறும் வகையில் அமேசான் சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதன்படி, அமேசான் இணையதளத்தில் எல்.ஜி Q6 ஸ்மார்ட்போன் இருக்கும் பக்கத்திற்கு சென்று, ‘Notify me’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். மேலும், தேவையான விவரத்தை கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில், ஸ்மார்ட்போன் வெளியிடப்படுவது குறித்த தகவல்களை பெற முடியம்.
எல்.ஜி Q6 ஸ்மார்ட்போன் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே(aspect ratio of 18:9). ஒரு கையில் அடக்கமாக இருக்கும் வகையில் நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ளது இந்த எல்.ஜி Q6.முன்னதாக எல்.ஜி நிறுவனமானது இந்த ஸ்மார்ட்போன் குறித்த டீசர் படத்தை வெளியிட்டது. அதில், எல்.ஜி Q6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1_990 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இதன் விலை எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்ள நாம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை காத்திருக்க தான் வேண்டும்.
எல்.ஜி Q6 (LG Q6) ஸ்மாட்ர்போனின் சிறப்பம்சங்கள்
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே (2160 x 1080 பிக்சல்ஸ்)
- ஸ்னாப்டிராகன் 435 ப்ராசஸர்
- 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ்
- பேட்டரி திறனை பொறுத்தவரை 3000mAh கொடுக்கப்பட்டுள்ளது.
- 13 எம்.பி ரியல் கேமரா, 1 5 எம்.பி செல்ஃபி கேமரா, 100 டிகிரி வைடு ஆங்கில் லென்ஸ் சிறப்பம்சம் கொண்டது.
- ஆண்ட்ராய்டு நௌகட் 7.1 இயங்குதளம்
- மைக்ரோ எஸ்.டி கார்டுபொருத்திக்கொள்ள முடியும்
ஆஸ்ட்ரோ பிளாக், ஐஸ் பிளாட்டினம், டெர்ரா கோல்டு உள்ளிட்ட மூன்று நிறங்களில் எல்.ஜி Q6 வெளிவருவரவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.