Advertisment

இங்கெல்லாம் இனி யு.பி.ஐ: இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறையை ஏற்கும் நாடுகளின் பட்டியல்

UPI goes global: தற்போது, ​​குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வங்கிகள் மட்டுமே யு.பி.ஐ சர்வதேச கட்டணங்களை (UPI international payments) ஆதரிக்கின்றன.

author-image
sangavi ramasamy
New Update
UPI Glo.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ், பொதுவாக யு.பி.ஐ (UPI) என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு கேம் சேஞ்சராக இருந்து வருகிறது. மளிகைப் பொருட்களைப் பெறுவது முதல் உங்களுக்குப் பிடித்த கேஜெட்டை வாங்குவது வரை,  யு.பி.ஐ மூலம் எளிதாக ஆன்லைனில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பொருட்களுக்கான கட்டணம் தவிர எவ்வித கூடுதல் கட்டணமும் இதில் வசூலிக்கப்படுவதில்லை. அதனால் இதை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். யு.பி.ஐ இனி இந்தியாவிற்கு மட்டும் அல்ல, அதை ஏற்றுக்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Advertisment

யு.பி.ஐ என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது?

யு.பி.ஐ இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மொபைல் கட்டண முறை ஆகும். QR குறியீட்டை ஸ்கேன் செய்து அல்லது பயனரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பணம் அனுப்பவும், பெறவும் செய்யலாம். பெரும்பாலான டிஜிட்டல் கட்டண முறைகளைப் போலன்றி, இது இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் பணத்தை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

யு.பி.ஐ கட்டணத்தை அதிகாரப் பூர்வமாக ஆதரிக்கும் நாடுகள் 

இலங்கை
மொரிஷியஸ்
பிரான்ஸ்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
சிங்கப்பூர்
பூட்டான்
நேபாளம்

பூட்டானின் ராயல் மானிட்டரி அத்தாரிட்டி (ஆர்.எம்.ஏ) உடன் இணைந்து 2021-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வெளியே யு.பி.ஐ கட்டணத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடுகளில் பூட்டானும் ஒன்றாகும். இது தவிர, பூட்டான் ரூபே வங்கி அட்டைகளை ஏற்றுக் கொண்டு வெளியிடும் முதல் நாடுகளில் பூட்டானும் ஒன்றாகும்.

இந்தியாவிற்கு வெளியே யு.பி.ஐ எவ்வாறு பயன்படுத்துவது?

இந்தியாவிற்கு வெளியே யு.பி.ஐ  பேமெண்ட்களைச் செய்ய, அந்தந்த ஆப்ஸில் சர்வதேச பேமெண்ட்டுகளை இயக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் PhonePe பயன்பாட்டின் மூலம் UPI ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், செட்டிங்ஸ் மெனுவில் எனெபிள் செய்ய வேண்டும். எனெபிள் செய்யப்பட்டபின் சர்வதேச இடங்களில் எளிதாக UPI பேமெண்ட்களைச் செய்ய முடியும்.

இருப்பினும், நீங்கள் இந்தியாவிற்கு வெளியே பயணம் செய்கிறீர்கள் என்றால், UPI கட்டணத்தைப் பொறுத்து மட்டுமே நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம், ஏனெனில் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் வணிகர்கள் மட்டுமே தற்போது UPI கட்டணத்தைப் பெற முடியும். இவை சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் நீங்கள் இந்திய ரூபாயைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதால், பரிவர்த்தனையைச் செயல்படுத்த உங்கள் வங்கி உங்களிடம் ஒரு சிறிய கட்டணம் வசூலிக்கலாம்.

யு.பி.ஐ சர்வதேச கட்டணத்தை எப்படி எனெபிள் செய்வது? 

போன்பே-ல் யு.பி.ஐ சர்வதேச கட்டணத்தை எனெபிள் செய்ய ஆப் ஓபன் செய்து இடது புறத்தில் உள்ள profile picture ஐகானை கிளிக் செய்து payment management சென்று international என்பதை கிளிக் செய்யவும். அடுத்து யு.பி.ஐ சர்வதேச கட்டணத்தை பயன்படுத்த உங்கள் பேங்கை தேர்வு செய்யவும். இப்போது யு.பி.ஐ பின் என்டர் செய்யவும். அவ்வளவு தான் இப்போது உங்கள் சர்வதேச UPI கட்டண முறை 6 மாதங்களுக்கு ஆக்டிவேட் செய்யப்படும். 

சர்வதேச கட்டணத்தை டீஆக்டிவேட் செய்ய, அதே மெனுவிற்குச் சென்று, disable  என்பதைக் கிளிக் செய்து, அங்கீகரிக்க உங்கள் UPI பின்னை உள்ளிடவும்.இதையும் கவனித்துக் கொள்ளுங்கள் ரூபே (RuPay) கிரெடிட்/டெபிட் கார்டுகள் இந்தியாவிற்கு வெளியே வேலை செய்யாது, அதனால் நீங்கள்  விசா அல்லது மாஸ்டர் கார்டுகளைப் பெற வேண்டும். 

போன் பே தரவுகளின் படி யு.பி.ஐ பேமெண்ட்டுகளை ஆதரிக்கும் வங்கிகள் பட்டியல் இங்கே

பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் இந்தியா
மகாராஷ்டிரா வங்கி
கனரா வங்கி
இந்திய மத்திய வங்கி
சிட்டி யூனியன் வங்கி லிமிடெட்
ESAF சிறு நிதி வங்கி லிமிடெட்
பெடரல் வங்கி லிமிடெட்
இந்தியன் வங்கி
IndusInd Bank Limited
கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட்
பஞ்சாப் & சிந்து வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி
சவுத் இந்தியன் வங்கி லிமிடெட்
காஸ்மோஸ் வங்கி
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/tech-news-technology/upi-goes-global-supported-countries-9164907/

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Upi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment