செவ்வாய் கிரகத்தில் அதிக அளவிலான நீர் இருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது, இது உலகளாவிய பெருங்கடலை உருவாக்கும் அளவிற்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
திங்களன்று வெளியிடப்பட்ட ஆய்வில், நாசாவின் மார்ஸ் இன்சைட் லேண்டரின் நில அதிர்வு தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செயல்பாடுகளை நிறுத்துவதற்கு முன்பு 1,300க்கும் மேற்பட்ட செவ்வாய் நடுக்கங்களைப் (marsquakes) பதிவு செய்தது.
கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராஃபியின் முன்னணி விஞ்ஞானி வாஷன் ரைட்டின் கூற்றுப்படி, இந்த நீர் செவ்வாய் கிரகத்தின் மேலோட்டத்தில் ஏழு முதல் பன்னிரண்டு மைல்கள் (11.5 முதல் 20 கிலோமீட்டர்) ஆழத்தில் அமைந்திருக்கலாம் என்று ஏபிசி செய்தி தெரிவித்துள்ளது.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஆறுகள், ஏரிகள் மற்றும் ஒருவேளை பெருங்கடல்கள் இருந்தபோது இந்த நீர் நிலத்தடி விரிசல்களில் ஊடுருவியிருக்கலாம் என்று ரைட் விளக்கினார்.
இருப்பினும், உறுதிப்படுத்தலுக்கு செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு ஆய்வு செய்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“