மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர்.
இந்தநிலையில், சிறார்களின் (18 வயதுக்கு கீழ்) தனியுரிமையை பாதுகாக்க மெட்டா நிறுவனம் தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் சிறார்களின் சுயவிவரங்களை ‘சந்தேகத்திற்குரிய’ நபர்கள் பார்க்கும்போது அவர்களின் மெசேஜ் பட்டன் ஆப்ஷன் நீக்கப்படும் என தெரிவித்துள்ளது. சிறார்கள் புகார் அளித்தால் ‘சந்தேகத்திற்குரிய கணக்குகள்’ எனக் குறிப்பிடப்படும்.

நிறுவனம் கூறுகையில், 16 வயதுக்குட்பட்டவர்கள் (சில நாடுகளில் 18 வயதுக்குட்பட்டவர்கள்) சிறார்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணையும் போது அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் தானாகவே அதில் குறிப்பிட்டு காட்டப்படும். தற்போது சிறார்களின்
தனியுரிமையை மேலும் அதிகரிக்க செட்டிங்ஸ் வசதியில் கூடுதல் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பாதுகாப்பு அம்சங்களை குறிப்பிடத் தவறிய சிறார்களுக்கு நோட்டிபிக்கேஷன் கொடுக்கப்பட்டு பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil