ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் ஆப் இப்போது வெப் வெர்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வெப் ஆப் பயன்படுத்தி போஸ்ட், லைக், கமெண்ட்ஸ், ரீ ஷேர் ஆகியவை செய்யலாம். அதோடு வேறு தளங்களுக்கும் ஸ்விட்ச் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், அடுத்த சில நாட்களில் இது அறிமுகம் செய்யப்படும் என்று கூறினார்.
ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக மெட்டாவின் இன்ஸ்டாகிராம் குழு த்ரெட்ஸ் என்ற பெயரில் ஆப் அறிமுகம் செய்தது. இன்ஸ்டாகிராம் லாக் கின் செய்து த்ரெட்ஸ் பயன்படுத்தும் படி அறிமுகம் செய்தது. ஜூலை தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட த்ரெட்ஸ் 2-3 தினங்களில் 100 மில்லியன் பயனர்களைப் பெற்று அமோக வரவேற்பு பெற்றது. எனினும் தரவுப் பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட வில்லை.
மிஸ்ஸிங் அம்சங்கள்
த்ரெட்ஸ் வெப் வெர்ஷன் மொபைல் ஆப் போல் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்காது. profile எடிட் செய்யவோ, Instagram DMகளுக்கு போஸ்ட் ஷேர் செய்யவோ, சில மேம்பட்ட செட்டிங்ஸ்களை அணுகவோ முடியாது. மெட்டா செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் பாய் கூறுகையில், டெஸ்க்டாப் வெர்ஷன் அடிப்படை அளவிலான செயல்பாட்டை மட்டுமே வழங்கும் என்று கூறினார்.
வெப் வெர்ஷன் அறிமுகம், த்ரெட்ஸ் பயன்படுத்துவதில் சரிவை எதிர்கொண்டுள்ளதால், இது அறிமுகம் செய்யப்படுகிறது எனக் சில ஆய்வுகள் கூறுகின்றன. வெப் வெர்ஷன் மூலம் அதிகமான பயனர்களை ஈர்க்க முடியும் என மெட்டா நம்பிக்கை தெரிக்கிறது. மேலும் சில அம்சங்களை அறிமுகம் செய்வது குறித்தும் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“