/tamil-ie/media/media_files/uploads/2017/09/Micromzx-bharath.jpg)
மைக்ரோமேக்ஸ் நிறுவனமானது 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட பாரத் 3(Bharat 3), பாரத் 4(Bharat 4) என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை இன்று(திங்கள்கிழமை) அறிமுகம் செய்துள்ளது. மலிவான விலையில் இந்த 4ஜிவோல்ட்இ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்றும், இன்று முதல் ஆஃப்லைனில் விற்பனைக்கு வருகிறது என மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 22 இந்திய மொழிகள் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தில் இயங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மைக்ரோமேக்ஸ் பாரத் 3 (Micromax Bharat 3)
ரூ.4,499 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பாரத் 3 (Bharat 3)ஸ்மார்ட்போனானது, டுயல் சிம் பொருத்திக்கொள்ளும் வசதி கொண்டது. 4.5 இன்ச் டிஸ்ப்ளே, ரிசொலூசன் (480x854 பிக்சல்ஸ்). MediaTek MT6737M SoC பிராசஸர் மற்றும் 1 ஜி.பி ரேம் கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில் மைக்ரோமேக்ஸ் பாரத் 3 (Bharat 3) ஸ்மார்ட்போனில் 5 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா உள்ளது.
8 ஜி.பி ஸ்டோடேஜ், மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 32 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும். 2000mAh பேட்டரி திறன் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், வை-பை, ஜி.பி.எஸ். யு.எஸ்.பி ஓ.டி.ஜி, மற்றும் 4ஜி சப்போர்ட் வசதி உள்ளது.
மைக்ரோமேக்ஸ் பாரத் 4 ( Micromax Bharat 4)
மைக்ரோமேக்ஸ் பாரத் 4 (Micromax Bharat 4) ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில், டுயல் சிம் வசதியுள்ளது. 5 இன்ச் எச்.டி டிஸ்ப்ளே (720x1280 பிக்சல்ஸ்). MediaTek MT6737 SoC ப்ராசஸர் மற்றும் 1 ஜி.பி ரேம். கேமரா சிறப்பம்சத்தை பொறுத்தவரையில் 5 எம்.பி ரியர் கேமரா, அதேபோல 5 எம்.பி செல்ஃபி கேமரா வசதியை கொண்டுள்ளது.
16 ஜி.பி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 32 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும். மைக்ரோமேக்ஸ் பாரத் 4 ( Micromax Bharat 4) ஸ்மார்ட்போனானது 2500mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. வை-பை, ஜி.பி.எஸ், யுபிஎஸ் ஓடிஜி மற்றும் 4 ஜி சப்போர்ட் ஆகியவை உள்ளடக்கம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.