மைக்ரோமேக்ஸ் நிறுவனமானது செல்ஃபி 2 ஸ்மாட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன்விலை, ரூ.9,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து ரீடெய்லர் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வருகிறது.
மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் பெயரை கேட்டாலே அதன் சிறம்பம்சத்தை யூகித்துக் கொள்ளலாம். ஆம், செல்ஃபி 2 ஸ்மார்ட்போன் எல்.இ.டி ப்ளாஷ் உடன் கூடிய 8 எம்.பி செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. சாதராண ப்ளாஷ் லைட்டில் எடுக்கும் புகைப்படத்தை போல அல்லாமல், இந்த போனில் புகைப்படும் எடுக்கும் போது சிறந்த அனுபவத்தை பெற முடியும் என்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.
ரியர் கேமராவைப் பொறுவத்தவரை, 13 எம்.பி (சிங்கிள் எல்.இ.டி ப்ளாஷ்). மேலும், சிறந்த புகைப்பட அனுபவத்தை பெறும் வகையில் மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2-ல் புதிய சிறம்பசங்களுடன் கூடிய ‘ஆப்’ வழங்கப்பட்டுள்ளதாக மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் 2-ன் சிறப்பம்சங்கள்
5.2 இன்ச் டிஸ்ப்ளே (எச்.டி 2.5 D டிஸ்ப்ளே)
மீடியோ டெக் MT6737 குவாட்கோர் பிராசஸர்
3 ஜி.பி ரேம், 32 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 64 ஜி.பி வரை கூடுதல் படுத்திக் கொள்ள முடியும்)
பேட்டரி திறனை பொறுத்தவரை 3,000mAh கொடுக்கப்பட்டுள்ளது.
4ஜி வோல்ட்இ, டுயல் சிம், வை-பை, ப்ளூடூத் 4.2, மற்றும் ஜி.பி.எஸ்.
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்கு தளம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
அதோடு, ஹார்டுவேருக்கு 100 நாட்கள் ரிபிளேஸ்மென்ட் வாரண்டியும் வழங்கப்படுகிறது.
கடந்த வாரம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான Yu நிறுவனம், யூனிக் 2 ( Yunique 2 )ஸ்டார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. 13 எம்.பி கேமரா கொண்ட அந்த போன் ரூ.5,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.