மைக்ரோமேக்ஸ்-வோடபோன் கூட்டணியில் மலிவுவிலை 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி "மைக்ரோமேக்ஸ் பாரத் 2 அல்ட்ரா" ரூ.999 என்ற விலையில், நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "மைக்ரோமேக்ஸ் பாரத் 2 அல்ட்ரா" ஸ்மார்ட்போனை பெற ரூ.2,899 பாதுகாப்பு தொகையாக முதலில் செலுத்த வேண்டும் என்றும், பின்னர் 36 மாதங்களில் ரூ.19,00 திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ முதலில் விலையில்லா 4ஜி ஃபீச்சர்போனை அறிமுகம் செய்திருந்தது. இதனையடுத்து, ஏர்டெல், பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்களும் இதே உத்தியை பயன்படுத்தி போன்களை அறிமுகம் செய்தன. இந்த பட்டியலில் தற்போது வோடபோன்-மைக்ரோமேக்ஸ் கூட்டணி மலிவு விலையில் 4ஜி ஸ்மார்போனை வெளியிட்டுள்ளது.
வோடபோன் "மைக்ரோமேக்ஸ் பாரத் 2 அல்ட்ரா" ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில், 36 மாதங்களுக்கு, மாதந்தோறும் ரூ.150-க்கு ரீசார்ச் செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. இது தொடர்பாக வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ள தகவலின்படி, முதல் 18 மாதங்களில் ரூ.900 தொகை வோடபோன் எம்.பேசே (Vodafone M-Pesa wallet) மூலம் வழங்கப்படும். மீதமுள்ள ரூ.1000 தொகையானது அடுத்த 18 மாதங்களின் நிறைவில் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பி.எஸ்.என்.எல் நிறுவனமானது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் வைத்து பாரத் 1 4ஜி வோல்ட்இ பீச்சர்போனை ரூ.2,200 என்ற விலையில் அறிமுகம் செய்திருந்தது. பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்திருந்த பாரத் 1 , கிட்டத்தட்ட ரிலையன்ஸ் ஜியோபோன் போன்ற சிறப்பம்சத்தையே கொண்டிருக்கிறது. பாரத் 1 ஸ்மார்ட்போனில் பிம்((BHIM) மொபைல்-ஆப் நிறுவப்பட்டு வெளிவருகிறது. பி.எஸ்.என்.எல்-ன் பாரத் 1-க்கு, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இன்டெர்நெர் ரூ.97 என்ற மாதாந்திர ப்ளானை வழங்கப்படுகிறது.