/tamil-ie/media/media_files/uploads/2023/01/New-Project9.jpg)
கணினி, லேப்டாப்களில் பெரும்பாலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும். ஆப்பிள் தனது பிரத்யேக ஓ.எஸ் பயன்படுத்துகிறது. இந்தநிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பழைய விண்டோஸ் வெர்ஷகளான Windows 7 மற்றும் Windows 8.1 ஆகியவற்றுக்கான ஆதரவை நிறுத்துகிறது. இந்த வெர்ஷனுக்கான security updates மற்றும் technical support ஆகியவற்றை நிறுத்துகிறது. இந்த வெர்ஷன் பயன்படுத்துபவர்கள் விரைவில் upgrade செய்து கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. ஜனவரி 10-ம் தேதிக்குள் upgrade செய்யும் பிடி நிறுவனம் கூறியுள்ளது.
அதேபோல் பிப்ரவரி 7-ம் தேதிக்கு பிறகு Windows 7 மற்றும் Windows 8.1 வெர்ஷனில் கூகுள் குரோம் பயன்படுத்த முடியாது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் எப்போதும் தங்கள் பயனர்களை சமீபத்திய software வெர்ஷனுக்கு அப்டேட் செய்யும் படி அறிவுறுத்துவார்கள். பாதுகாப்பு பயன்பாடு காரணமாக நிறுவனங்கள் இதைக் கூறுவார்கள். புது அப்டேட்டில் எப்போதும் பாதுகாப்பு குறைபாடு அம்சங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படும். மேலும் வேறு புது அம்சங்கள் ஏதேனும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். இந்தநிலையில், Windows 7 மற்றும் Windows 8.1 வெர்ஷனை அப்டேட் செய்யும் படி கூறப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 அல்லது விண்டோஸ் 11க்கு அப்கிரேடு செய்வது எப்படி?
புதிய வெர்ஷன் விண்டோஸ் இன்ஸ்டால் செய்ய கட்டணம் தேவையில்லை. தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. அப்டேட் செய்ய முதலில் உங்கள் லேப்டாப், கணினியில் Windows 10 வெர்ஷன் அப்டேட் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அப்டேட் இருந்தால் செட்டிங்ஸ் சென்று Windows Update பக்கத்திற்கு சென்று டவுன்லோடு கொடுத்து அப்டேட் செய்யுங்கள். லேப்டாப்பை restart செய்து இன்ஸ்டால் செய்யவும். அவ்வளவு தான் Windows 10 வெர்ஷன் இன்ஸ்டால் ஆகிவிடும். மீண்டும் Windows Update settings பக்கம் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.