மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் விரைவில் நீக்கப்படவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் முதன் முதலாக 1985-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 32-ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தநிலையில், மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் விரைவில் நீக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 3 டி வரைபட மென்பொருளில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இனிவரும் விண்டோவ்ஸ் வெளியீடுகளில் மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் முற்றிலும் நீக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.
பெயிண்ட் 3D என்பது என்ன?
பெயிண்ட் 3D-யை பயன்படுத்தி, 3D தொழிழ்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். கடந்த ஏப்ரல் மாதம் கிரியேட்டர்ஸ் அப்டேட்ஸ் உடன் பெயிண்ட்3D குறித்து அறிவிக்கப்பட்டது. இந்த பெயிண்ட் 3D-யை பயன்படுத்தி புகைப்படங்களை 3D-யாக மாற்றிக் கொள்ள முடியுமாம். மேலும், 2D-யில் இருந்து 3D ஆக மாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஆன்லைனில், பெயிண்ட் 3D உள்ளது என்றும், விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்கள் இதனை டவுண்லோடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் எப்போது நீக்கப்படும்?
மைக்ரேசாஃப்ட் எப்போது நீக்கப்படும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. Windows 10 Autumn Creators அப்டேட்ஸ் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேதியும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. எனவே, புதிய அப்டேட்ஸ் செயல்பாட்டுக்கு வரும்போது, மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.