/tamil-ie/media/media_files/uploads/2023/02/New-Project68.jpg)
ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறிவிட்டன. ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது மாடல் போன்களும், பட்ஜெட் போன்களும் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மோட்டோரோலா ( Motorola) நிறுவனம் Moto E13 என்ற புது ஸ்மார்ட்போனை பிப்ரவரி 8-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் ஆரம்ப விலை ரூ.7,000க்குள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Moto E13 போன் 4ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன் 3 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வெள்ளை, ப்ளு மற்றும் பிளேக் நிறங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. பின்புறம் சிங்கிள் கேமராவும் முன்புறம் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறக் கேமரா 13 மெகா பிக்சல் ஆகும். Moto E13 ஆனது 6.5-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. சிறந்த viewing அனுபவத்திற்காக டால்பி அட்மோஸ் ஆடியோ ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. 5,000mAh பேட்டரி வசதி உள்ளது.
Moto E13 டைப்-சி போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை, டூயல்-சிம் கார்டு, ப்ளூடூத் 5.0, 10W சார்ஜர் மற்றும் IP52 water-repellent ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. Moto E13ஆனது ரூ. 6,499- 6,999 விலையில் அறிமுகப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.