Advertisment

5,000 mAh பேட்டரி திறன் கொண்ட மோட்டோ E4 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

இந்தியாவில் மோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 5,000 mAh கொண்ட இதன் பேட்டரி திறன் தான்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
moto-e4-plus-

மோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக பேட்டரி திறன் என்பது இந்த ஸ்மார்போனில் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்தியாவில் மோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 5,000 mAh கொண்ட இதன் பேட்டரி திறன் தான். இதன் விலை ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 11:59 மணி முதல் ப்ளிப்கார்டில் பிரத்யேகமாக விற்பனைக்கு வருகிறது.

மோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதையொட்டி, அந்நிறுவனம் பல்வேறு ஆஃபர்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மோட்டோ பல்ஸ் 2 இயர்ஃபோன் ரூ.649 என்ற மலிவான விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதோடு, இரண்டு மாதத்திற்காக ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக வழங்கப்படுவதாக அவிறித்துள்ளது.

ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.443 என்ற ரீசார்ஜில், 84 ஜி.பி டேட்டா, 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல, ரிலையன்ஸ் ஜியோ ஜியோ மெம்பர்களுக்கு 30 ஜி.பி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

மோட்டோ E4 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.8,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்த E4 ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் 2,800 mAh என இருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ E4 ப்ளஸ்-ல் கூடுதலாக பேட்டரி திறன் உள்ளது.

மோட்டோ E4 ப்ளஸ் -ன் டிசைன் கிட்டத்தட்ட மோட்டோ G5 வரிசையில் வரும் ஸ்மார்ட்போன்களுடன் ஒத்துப்போகும் வகையில் தான் இருக்கிறது. மோட்டோ E4 ப்ளஸ்-ன் வடிவமைப்பானது மெட்டல் யுனிபாடி டிசைனை கொண்டிருக்கிறது. ஹோம்பட்டனில் ஃபின்கர்ஃப்ரிண்ட் ஸ்கேனர் உள்ளது.

  • 5.5 இன்ச் டிஸ்பிளே, ரிசொலூசன் 1080 x 720 பிக்சல்ஸ்
  • குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 427 ப்ராசஸர்
  • 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ்
  • கேமராவை பொறுத்தவரை 13 எம்.பி ரியர் கேமராவும், 5 எம்.பி செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குளத்தில் செயல்படுகிறது.
  • 4ஜி சப்போர்ட்
  • தண்ணீரை எதிர்த்து ( water-repellent coating) செயல்படும் வகையில் இந்த ஸ்மார்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
Smartphone Lenovo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment