மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் நவம்பர் 13-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆன்லைன் வணிகதளமான ப்ளிப்கார்டு, மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனை பிரத்யேகமாக விற்பனைக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக மோட்டோரோலா நிறுவனமானது மோட்டோ எக்ஸ்4 (Moto X4) ஸ்மார்ட்போன் குறித்த டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் 2017 தொழில்நுட்ப விழாவின்போது மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பு வெளியானது. டுயல் ரியர் கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட இந்த மோட்டோ எக்ஸ்4, நவம்பர் 13-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
- மோட்டோ எக்ஸ்4( Moto X4)ஸ்மார்ட்போனின் சிறப்பம்சத்தை பொறுத்தவரையில், 5.2” FHD LTPS IPS டிஸ்ப்ளேவை (1080×1920 ரிசொலூசன்) கொண்டிருக்கிறது.
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ப்ராசஸர்(2.2 GHz)
- 3ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ். மைக்ரோ எஸ்.டி கார்டு சப்போர்ட் செய்யக் கூடியது(2டி.பி )
- 3000 mAh என்ற பேட்டரி திறன் கொண்டுள்ளது. இந்த மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனை15 நிமிடம் டர்போ சார்ஜர் மூலம் சார்ச் செய்தால், 6 மணி நேரம் வரை பேட்டரி திறனை தக்க வைத்துக் கொள்ளக்கூடியது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- டுயல் ரியல் கேமரா சிறம்பம்சம் என்பது இந்த மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. 12 எம்.பி மற்றும் 8 எம்.பி என்ற டுயல் கேமரா வசதியானது, குறைந்த வெளிச்சத்திலும் விரைவில் ஃபோகஸ் செய்யக்கூடிய ஆட்டோ-ஃபோகஸ் டெக்னாலஜியை கொண்டிருக்கிறது.
- ஃபிளாஷ் லைட்டுடன் கூடிய 16 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
- வாட்டர் மற்றுட் டஸ்ட் ரெஸிஸ்டன் திறனில் IP68 ரேட்டிங் பெற்றுள்ளது.
- மோட்டோ எக்ஸ்4 (Moto X4) சிங்கிள் சிம் ஸ்மார்ட்போன் என்பது கவனிக்கத்தக்கது.