மோட்டோ ஜி5எஸ் (Moto G5S) “மின்நைட் ப்ளூ” நிறத்தில் அறிமுகம்!

மோட்டோரோலா ஜி5எஸ் (Moto G5S) ஸ்மார்ட்போனில் புதியதாக “மின்நைட் ப்ளூ” நிறத்திலான போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Motorola, Motorola Moto G5S, Smartphones.

மோட்டோரோலா ஜி5எஸ் (Moto G5S) ஸ்மார்ட்போனில் புதியதாக “மின்நைட் ப்ளூ” நிறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மோட்டோரோலா ஜி5எஸ் (Moto G5S) ஸ்மார்ட்போனானது ஃபைன் கோல்டு, லூனால் கிரே ஆகிய நிறங்களில் வெளிவந்த நிலையில், தற்போது மின்நைட் ப்ளூ நிறத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.14,999 என்ற விலையில் மோட்டோரோலா ஜி5எஸ் (Moto G5S) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, எனினும், பண்டிகை கால விற்பனையாக ரூ.12,999 விற்பனைக்கு வருகிறது இந்த மோட்டோரோலா ஜி5எஸ் (Moto G5S).

இது தொடர்பாக மோட்ரோரோலா (Motorola Mobility India) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதின் மதூர் கூறும்போது: இந்த பண்டிகை காலத்தில் புதிய நிறத்திலான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் இதுபோன்ற ஆஃபர்களை வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.

மோட்டோரோலா ஜி5எஸ் (Moto G5S)சிறப்பசங்களை பார்க்கையில்,

  • 5.3 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்ப்ளே,
  • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசஸர்
  • 3.ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 128 ஜி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.
  • 16 எம்.பி ரியல் கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா
  • 3,000mAh பேட்டரி திறன்(டர்போ சார்ஜ் செய்யும் வசதி உள்ளது)

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Motorola moto g5s midnight blue edition launched in india check out all the details

Next Story
ஜியோபோன் முன்பதிவு… தீபாவளி முடிந்ததும் விரைவில் தொடங்கும் என தகவல்Reliance Jio, JioPhone, Reliance, Diwali,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express