மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்… 16 எம்.பி செல்ஃபி கேமரா + டுயல் ரியர் கேமரா !

மோட்டோ எக்ஸ்4 (Motorola Moto X4) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Motorola, Lenovo, Smartphones, Motorola Moto X4,

மோட்டோ எக்ஸ்4 (Motorola Moto X4) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ எக்ஸ் சீரியஸில் வெளிவரும் லேடஸ்ட் ஸ்மார்ட்போனான மோட்டோ எக்ஸ்4, பிளிப்கார்டு மூலமாக பிரத்யேக விற்பனைக்கு வருகிறது. டுயல் கேமரா, மற்றும் செல்ஃபி ப்ளாஷை தவிர்த்து டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டன்ட்-ல் IP68 ரேட்டிங் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி கொண்ட மோட்டோ எக்ஸ்4-ன் விலை ரூ.20,999 என்றும், 4ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ரேம் கொண்ட மோட்டோ எக்ஸ்4-ன் விலை ரூ.22,999 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக ஆஃபராக எக்ஸ்சேஞ்ச் வசதி வழங்கப்படுகிறது. அதோடு, எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஏர்டெல் நெட்வொர்க் 320 ஜி.பி டேட்டா ஆஃபரை வழங்குகிறது.

5.20 இன்ச் டிஸ்ப், ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளம். 3ஜிபி/4ஜி.பி ரேம் மற்றும் 32ஜி.பி/64ஜி.பி ஸ்டோரேஜ். (2 டி.பி வரை அதிகரித்துக் கொள்ளலாம்)

3000mAh பேட்டரி திறனுடன் வெளிவரும் இந்த மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் டர்போ சார்ஜர் வசதியுடன் வருகிறது. அதன்படி 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 6 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வகையில் பேட்டரி திறன் கிடைக்கப்பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

12 எம்.பி + 8 எம்.பி என்ற டுயல் ரியர் கேமரா சிறம்பம்சம் உள்ளது.

16 எம்.பி செல்ஃபி கேமராவை கொண்டிருக்கிறது.

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டன்ட் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

சூப்பர் ப்ளாக் மற்றும் ஸ்டெர்லிங் ப்ளூ ஆகிய நிறங்களில் வெளிவருகிறது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Motorola moto x4 launched in india price specifications and everything you need to know

Next Story
ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல்: பெஸ்ட் 1 ஜி.பி டேட்டா ப்ளான் தருவது எந்த நெட்வொர்க்?Smartphones, Reliance Jio, Vodafone, Idea, BSNL, Best 1 GB data Per Day Plans,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express