போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் குழு சோதனை பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமி திரும்ப முடியாமல் உள்ளனர். இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வர நாசாவுக்கு இன்னும் 19 நாள் மட்டுமே டைம் உள்ளது. காரணம், ஐ.எஸ்.எஸ்ஸிற்கு அடுத்து க்ரூ-9 பணியை அனுப்ப வேண்டிய திட்டம் உள்ளது.
முதல் முறையாக விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்ட போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தை சோதனை செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
கடந்த ஜுன்-5ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் ஏவப்பட்டது. ஜுன் 13-ம் தேதி ஐ.எஸ்.எஸ் சென்றடைந்தனர். திட்டதின் படி, விண்கலத்தை ஆய்வு செய்து 1 வாரத்திற்கு பின் மீண்டும் வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமி திருப்பவதே திட்டமாகும். ஆனால், விண்கலத்தின் த்ரஸ்டர் மற்றும் ஹீலியம் அமைப்பின் செயலிழப்புகள்அவர்கள் திரும்புவதை தாமதப்படுத்தி உள்ளது.
விஞ்ஞானிகள், பொறியாளர்கள் பிரச்சனையை சரி செய்ய வேலை செய்து வரும் நிலையில் தற்போது, க்ரூ-9 பணியும் நெருங்குவதால் நாசாவுக்கு இது சவாலாக மாறியுள்ளது. இந்த சவாலான பணிக்கு மத்தியில் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் SpaceX Dragon capsule உட்பட சாத்தியமான மாற்று வழிகளுடன், பொறியாளர்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அயராது உழைத்து வருகின்றனர்.
க்ரூ-9 பணி
க்ரூ-9 பணி, ஆகஸ்ட் 18, 2024வாக்கில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது. நாசா விண்வெளி வீரர்களான ஜீனா கார்ட்மேன், நிக் ஹேக் மற்றும் ஸ்டெபானி வில்சன், ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரை ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையித்திற்கு அனுப்புவது இந்த திட்டமாகும்.
க்ரூ-9 பணிக்கு முன் ஸ்டார்லைனர் விண்கலம் பூமி திருப்ப வேண்டும். இந்நிலையில், ஸ்டார்லைனர் செயலிழந்தால், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூலைப் பயன்படுத்துவது உட்பட வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை மீண்டும் பூமிக்குக் கொண்டுவருவதற்கான மாற்று முறைகளை நாசா பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“