Advertisment

500 மில்லியன் கி.மீ, 6 ஆண்டுகள் பயணம்: சைக் சிறுகோளுக்கு விண்கலம் அனுப்பும் நாசா

NASA's Psyche mission to the asteroid: பென்னு சிறுகோள் ஆய்வைத் தொடர்ந்து நாசா சைக் என்று சிறுகோளுக்கு வரும் அக்.12-ம் தேதி விண்கலம் அனுப்ப உள்ளது. இந்த சிறுகோள் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை விட பெரியதாகும்.

author-image
sangavi ramasamy
New Update
 Psyche spacecraft  Illustration.jpg

Psyche spacecraft Illustration

எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் நாசா சைக் சிறுகோளை நோக்கி வரும் அக்டோபர் 12-ம் தேதி விண்கலத்தை ஏவ உள்ளது. புளோரிடாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் 

கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. 

Advertisment

 சிறுகோளின் பெயரையே நாசா திட்டத்திற்கும் வைத்துள்ளது. சைக் மிஷின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் விண்கலம்  அக்டோபர் 5- தேதி ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கருவிகள் சரிபார்ப்பிற்காக விண்கலம் அக்டோபர் 12-ம் தேதி இந்திய நேரப்படி மாலை 7.46  மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்தது. 

சைக் சிறுகோள் சிறப்பம்சம்

அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் படி, சைக் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் 16வது சிறுகோள் ஆகும். இது 1852 ஆம் ஆண்டில் இத்தாலிய வானியலாளர் அன்னிபேல் டி காஸ்பரிஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறுகோளுக்கு அவர் பண்டைய கிரேக்க புராணங்களில் ஆன்மாவின் தெய்வத்தின் பெயரின் சூட்டினார். 

இந்த சிறுகோளில் உலோகம் (மெட்டல்)  நிறைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதனால்தான் இது வானியலாளர்களின் ஆர்வத்தை கொண்டுள்ளது. இது முழுக்க முழுக்க கிரகங்களின் மையத்திலிருந்து உலோகத்தால் ஆனதாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர். 

தமிழ்நாட்டை விட பெரியது  

சிறுகோள் பூமியில் இருந்து 500 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சைக் மிஷன் சுமார் ஆறு ஆண்டுகளில் சிறுகோளை அடையும் என்று நாசா நம்புகிறது. சிறுகோள் ஒரு சரியான கோளமாக இருந்தால், அதன் விட்டம் சுமார் 226 கிலோமீட்டர் ஆகும், இது டெல்லிக்கும் சண்டிகருக்கும் இடையிலான வான்வழி தூரத்தைச் சுற்றி இருக்கும். 

சைக் என்ற சிறுகோள் சுமார் 165,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். சூழலைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மாநிலம் சுமார் 130,058 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.

சைக் விண்கலம் குறைந்த உந்துதல் கொண்ட சூரிய-மின்சார உந்துவிசையைப் (low-thrust solar-electric propulsion) பயன்படுத்தி சிறுகோளை நோக்கிப் பயணிக்கும். அதன் வழியில், அது செவ்வாய் கிரகத்தில் பறக்கும் மற்றும் ஈர்ப்பு உதவியைப் பயன்படுத்திக் கொள்ளும். சிறுகோளுக்கு வந்த பிறகு, அது சிறுகோளைச் சுற்றி நான்கு நிலை சுற்றுப்பாதைகளில் இருந்து அறிவியல் ஆய்வுகளை செய்யும். விண்கலம் ஒவ்வொரு சுற்றுப்பாதையிலும் சிறுகோளை நெருங்கிச் செல்லும்.  

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/nasa-psyche-asteroid-mission-8978044/

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment